Saturday, February 20, 2016

கண் திருஷ்டி நீக்கும் கண்ணாடி



Written by Niranjana 

கல்லடி பட்டாலும் கண்ணடி மட்டும் படக்கூடாது என்பார்கள். கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருந்தாலும், தண்ணீரின்மேல் பாசி மூடியிருந்தால் தண்ணீர் இருப்பது தெரியாது. அதுபோல் ஜாதகத்தில் யோகமும், திறமையும் இருந்தாலும் கண் திருஷ்டி பட்டால் சூரியனை மேகம் மறைத்து வைப்பது போல் யோகத்தைத் தடுத்துவிடும். கண்திருஷ்டி.

நாம் சாப்பிடும்போது எங்கோ யாரே நினைத்தால் புறை ஏறும். அதேபோல் யாரோ நம்மை திட்டினாலும் நாக்கை கடித்துக் கொள்வோம். அதுபோல்தான், நமக்குத் தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும்.

வீட்டிற்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது.

அமாவாசை, கேதார கௌரி நோன்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிபடுவோம். காரணம், நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குல தெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது.

கண்ணாடியை வழிபடும் போது, அவர்களின் ஆத்மா, முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாகத் தோன்றிடும், இன்னும் நம்மை மறக்கமால் வணங்குகிறார்கள் என்று அவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும்.

கண்ணாடி வைக்காமல் வணங்கினால், என்னதான் அவர்களுக்குப் பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது இந்து சாஸ்திரம். அதுபோல் வெளியில் இருந்து வீட்டிற்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால், அவர்களால் உண்டாகும் கண் திருஷ்டி அந்த இல்லத்தைப் பாதிக்காது.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved