Friday, September 28, 2018

விளக்கு வைக்கும் போது இதை செய்யாதிங்க


Written by NIRANJANA

வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? தெரியுமா.

மின் விளக்கு வருவதற்கு முன்பே அக்னி பகவானின் அருளால் தீப வெளிச்சம் உண்டானது. பஞ்சபூதங்களில் அக்னிக்கே அதிக பலம் என்கிறது சாஸ்திரம். தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே எரியும். எக்காரணத்திலும் நெருப்பு கீழ் நோக்கி எரியாது. யாருக்கும் தலை வணங்காது. இப்படி சக்தி வாய்ந்த நெருப்பை வீட்டில் இறைவன் முன்பாக தீபமாக காலை,மாலையிலும் ஏற்றி வைத்தால் அந்த வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்தியை தீப ஒளி பொசிக்கி வைக்கும். போசிக்கி வைத்ததை தலையில் தேய்த்துக்கொண்டால் உயர்ந்த அந்தஸ்தை தராது. அதனால் தீபத்தின் திரியை சரி செய்த பிறகு கையில் இருக்கும் எண்ணை பிசுக்கை வேறு ஒரு துணியால் சுத்தமாக துடைத்துக் கொள்ளவேண்டும். கோயிலில் விளக்கு ஏற்றும் போதும் இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்தில்….

ஸ்ரீராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ரீஆஞ்சேனயர் வந்து நிற்பார். அதுபோல் வீட்டில் குறிப்பாக மாலையில் விளக்கு வைத்த நேரத்தில் அபசகுணமாக பேசுவதையோ, வீட்டை பெருக்குவதையோ, குப்பையை வெளியில் கொட்டுவதையோ தவிர்த்தால் அந்த வீட்டில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்வாள். மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான தெய்வீக பாடல்களையும் ஒலிக்கச் செய்யலாம். இப்படி நல்லமுறையில் சாஸ்திரத்தை கடைபிடித்தால் இன்னல்கள் மறையும் நன்மைகள் ஏற்படும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved