Thursday, September 19, 2013

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி?

வீட்டில் ஆரோக்கியமாக உள்ள எல்லோருக்கும் பொதுவான உணவுகள் ஆஸ்துமா நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுக்கும் போது கவனம் தேவை. 

குறிப்பாக ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனென்றால் சிலவகையான உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி உடனடி எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன. 

சிலவகையான, புரதம் சார்ந்த உணவுகள், திராட்சை, வாழைப்பழம், இளநீர், தயிர், மோர், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் சிலருக்கு மூக்கில் நீர் வடியத் தொடங்கிவிடும். தொடர்ந்து மூச்சு விடுவதிலும் சிரமம் ஆகிவிடும். கூடவே இருமலும் தோன்றி விடும். எனவே ஆஸ்துமா நோயாளி பழவகைகள் அனைத்தையும், எண்ணெய், நெய் பலகாரங்கள், இனிப்புப் பண்டங்கள், முந்திரி மற்றும் பாதாம்பருப்பு, இளநீர், நிலக்கடலை ஆகியவற்றையும் உறுதியாகத் தவிர்த்து விடுதல் வேண்டும். பேரீச்சம்பழம், கிஸ்மிஸ்பழம் ஆகியவற்றை உண்ணலாம். 

முதலில் ஒரு நோயாளி என்ன வகையான உணவு வகைக்குப் பழக்கப்பட்டவராக இருக்கிறாரோ அதையே பின்பற்றி வருமாறு செய்தால் நன்று. ஒருவர் சைவ உணவுப் பழக்கமுடையவரானால் சைவ உணவையும், அசைவரானால் அசைவ உணவையும் உண்டுவருவது நலம்.
உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றங்களைச் செய்யாதிருத்தல் நன்று. என்றாலும், சிலவகைப் பொருட்கள் நோயைப் பெருக்குகிறது என்று தெரிந்தால்…மேலும் படிக்க

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறைஎப்படி?