Friday, May 10, 2013

நல்ல மருமகன் அமையும் யோகம்

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

பெற்றோர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 11-ம் இடம் மருமகள் (அ) மருமகனை பற்றி அறியும் இடம். இந்த 11-ம் இடத்தில் சனி, ராகு, கேது செவ்வாய், சூரியன் இருந்தாலும் அல்லது குரு பார்வை இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு அமையும் மருமகளோ, மருமகனோ தங்கள் மனம் போன போக்குபடிதான் நடப்பார்கள். அவ்வளவாக அனுசரிக்கும் தன்மை அவர்களிடம் இருக்காது.

தங்கமான மருமகன் (அ) மருமகள்

பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை குரு பார்த்தாலும் அவர்களுக்கு அமைகிற மருமகன்-மருமகள் சொக்கதங்கமாக இருப்பார்கள். நாம் சொல்வதற்கு முன் செய்து முடிப்பார்கள். இப்படி அமைவது போன ஜென்ம புண்ணியம் என்றும் சொல்லலாம்.
சரி, 11-ல் சூரியன், சனி, ராகு, கேது செவ்வாய் போன்ற கிரகங்கள் அமைந்து, மருமகளோ-மருமகனோ தங்கள் மாமனார்-மாமியாரின் மனம் நோகும் படி நடந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்களுக்கு அதாவது அந்த மருமகளுக்கோ-மருமகனுக்கோ குழந்தை பிறந்து, அந்த குழந்தையின் (பேரன்(அ)பேத்தி) ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் சுப கிரகம் இருந்தால், அதாவது புதன், சுக்கிரன், சந்திரன், குரு போன்ற சுப கிரகங்கள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தால், மருமகளோ, மருமகனோ காலபோக்கில் தங்கள் மாமனார்-மாமியாரிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளும் தன்மை பெற்று விடுவார்கள். இதுதான் ஜாதக ரகசியம்.


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved