Sunday, January 3, 2016

ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 3





Written by Niranjana

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ளது அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்.

கோவிலின் கீழே கோட்டை குளமும்-மேலே மலைக்கோட்டை என இயற்கையான சூழலில் இந்த கோவில் உள்ளது.

ஆஞ்சனேயரை மனதார நினைத்து வணங்கினாலே வணங்குபவர்களுக்கு தைரியம், ஆற்றல் போன்றவை கிடைக்கும். அத்தகைய மகிமை பொருந்திய ஆஞ்சநேயனிடமே ஒருவர் மோதினான் என்றால் அப்படி மோதியவனுக்கு எவ்வளவு கெட்ட நேரம் இருக்க வேண்டும்.? யார் அவன்.? ஏன் அனுமானிடம் மோதினான்?. என்பதை தெரிந்துக்கொள்வோம்.

லட்மனின் மயக்கத்தை தௌவிக்க என்ன வலி?
சீதையை கடத்தி சென்ற இராவணனை வீழ்த்தி, சீதையை மீட்க இராமன் செய்த யுத்தம்இராம-இராவண யுத்தம். அந்த போரில் இராவணனின் மகன் இந்திரஜித் பிரம்மாஸ்திரம் ஏவினான். அது லட்சுமணனை தாக்கியது. இதனால் லட்மணன் மயங்கி விழுந்தார்.

லட்சுமணனை காப்பாற்ற என்ன செய்வது? என்று தெரியாமல் யோசிக்க முடியாமலும் கலங்கி நின்றார் இராமன். பிறரின் துன்பத்தை எளிதாக தீர்க்க வழி சொல்ல முடியும். அதுபோல ஒரு துன்பம் நமக்கே ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வதென்று புத்தி வேலை செய்யாது. இது அவதார புருஷனுக்கும் பொருந்தியது.

இந்திரஜித்தால் தாக்கபட்டு மயங்கி விழுந்த லட்சுமணனுக்கு மீண்டும் நினைவு திரும்ப, “பர்வதமலையில் உள்ள சஞ்சீவி மூலிகை இருந்தால் லட்சுமணன் உயிர் பிழைப்பார்.” என்றார் விபீஷ்ணன்.

திண்டுக்கல் பெயர் காரணம்
இதை கேட்ட அஞ்சனேயர், அந்த சஞ்சீவி மூலிகை எப்படி இருக்கும்? என்று கேட்க கூட நேரம் இல்லாமல் உடனே பர்வதமலைக்கு பறந்தார். அங்கே எது சஞ்சீவி மூலிகை? என்றே அவருக்கு தெரியவில்லை. பொன்னாங்கன்னி கீரை சாப்பிட்டால் நல்லது என ஒருவர் சொன்னால், அது எப்படி இருக்கும் என்று கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் கீரையை பறிக்க சென்றால் அங்கே எல்லா கீரைகளும் ஒரே மாதிரிதான் தெரியும். அங்கே கையில் கிடைத்ததை பறித்து வந்து, பிறகு இதில் எது பொன்னாங்கன்னி கீரை என்று கேட்டு தெரிந்துக்கொள்வதை போல, மகாவல்லமை படைத்த அனுமன், எது சஞ்சீவி மூலிகை என்று தேடிக் கொண்டிருக்காமல் ஓட்டுமொத்தமாக அந்த பர்வதமலையின் ஒரு பகுதியை பெயர்த்து எடுத்துக் கொண்டு இலங்கையை நோக்கி பறந்தார்.

அப்போது வழியில் இராவணனின் உறவினனான திண்டாசுரன் என்பவன் அனுமனை தடுத்து நிறுத்தி கடும் போர் செய்தான். அந்த போரில் ஆஞ்சனேயரின் கையில் இருந்த பர்வதமலையில் இருந்து ஒரு துண்டு பகுதி கீழே விழுந்தது. அனுமனிடம் போர் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தான் திண்டாசுரன். திண்டாசுரனால் நடந்த போரில் விழுந்த அந்த மலைதுண்டு திண்டுமலை என்று அழைக்கப்பெற்றது.

போரில் தோல்வி அடைந்த திண்டாசுரன், அனுமனிடம் அந்த மலைதுண்டு இங்கேயே தன் பெயரில் இருக்க வேண்டும் எனக் கேட்டு சரண் அடைந்தான். தனக்கு பிறகு இந்த பகுதியில் அனுமன் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற வரத்தையும் பெற்றான் திண்டாசுரன். .அன்று திண்டுமலை என்று அழைக்கப்பட்ட இடம்தான் இன்று திண்டுக்கல்லானது.

போரில் வெற்றி பெற
ஆஞ்சனேயரின் பக்தரான முத்துவீரப்ப நாயக்கரின் நாட்டை பிடிக்க எதிர்நாட்டு படை போருக்கு வந்துக் கொண்டிருந்தது. “ஒருவேளை போரில் தோல்வி அடைந்தால் உயிர் வாழ முடியாது. அதற்குள் ஒருமுறை தன் இஷ்ட தெய்வமான ஆஞ்சனேயரை வழிபட வேண்டும் என்று நினைத்து வேண்டினார் அரசர். அன்றிரவு அரசரின் கனவில், “மலைக்கோட்டை அடிவாரத்தில் எனக்கு கோவில் எழுப்பு.” என்றார் அனுமன்.

எதிரிகள் வந்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் கோயில் கட்டுவதா? என நினைக்கவில்லை அரசர். ஆஞ்சனேயரின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்க போகிறது. நாம் ஏன் குழப்பம் அடைய வேண்டும் என நினைத்து கோயில் கட்டும் திருப்பணியை தொடங்கி செய்து முடித்து, அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதன் பிறகு மன்னருக்கும் அவரின் படை வீரர்களுக்கும் ஒரு மாபெரும் மன தைரியம் கிடைத்தது. நாட்டின் எல்லையை தொட்ட எதரிகளை பந்தாடினர் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரின் போர் படை வீரர்கள். மாபெரும் வெற்றி அடைந்தார்கள்.

அபயம் என்று வந்தவர்களுக்கு துணை நின்று காப்பதால்அபயவரத ஆஞ்சநேயர்என்று பெயர் வைத்தார் அரசர் முத்துவீரப்ப நாயக்கர்.

காலணியுடன் ஆஞ்சனேயர்
பொதுவாக காலணியுடன் இறைவனை காணுவது அபூர்வம். அந்த அபூர்வத்தை இந்த ஆஞ்சனேயரிடம் காணலாம். ஆம். போர்களத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுக்கச் சென்றதால் ஆஞ்சநேயர் காலணி அணிந்திருந்தார். அதனால் இந்த அபயவரத ஆஞ்சநேயர், காலில் காலணி அணிந்த தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் மார்பில் லிங்கத்துடனும், இடுப்பில் ஒரு கத்தியுடனும் காட்சி தருவதும் அபூர்வம்.

வேண்டியதை வேண்டியபடி தரும் ஆஞ்சநேயர்
அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவிக்கலாம். தயிர் சாதம் படைத்து வழிபடலாம். இதனால் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் நீங்கும். திருமணதடை விலகும். அபயவரத ஆஞ்சநேயரை வணங்கினால் நமக்கு வரும் அபாயங்களை போக்கி நல்வாழ்க்கை தருவார் அபயவரத ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும்.

துயரங்களை தூக்கி எறியும் ஆஞ்சநேயர்

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன?


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 








© 2016www.bhakthiplanet.com All Rights Reserved