Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
நிமிடத்திற்கு
2600 அமெரிக்க டாலர் சம்பாதித்து உலக கோடீஸ்வராக கொடிகட்டி பறக்கிறார்
பில்கேட்ஸ். சாதாரண குடும்பத்தில் பிறந்து 13 வயதில் இருந்தே கணிணி
தொழில்நுட்பங்களை ஆராய்ந்து தனது அறிவு திறனால் முன்னேறியவர். மைக்ரோசாப்ட்
தலைவர். உலகமே பெருமைபடும் மனிதர் பில்கேட்ஸ். இன்றைய பகுதியில் நாம்
இவருடைய ஜாதகத்தின் சிறப்புகளைதான் ஆராய இருக்கிறோம்.
28.10.1955.ம் வருடம் பிறந்தவர் வில்லியம்
ஹென்றி கேட்ஸ் என்கிற பில்கேட்ஸ். பொதுவாக சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்தவர்கள் தனித்திறன் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள். இவர் மீன இராசி –
ரிஷப லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரின்
ஜாதகத்தில் சிறப்புக்குரிய யோகங்களாக “காளசர்ப்பயோகம்”, புதன் – சுக்கிரன்
பரிவர்த்தனை பெற்று, “பரிவர்த்தனை யோகம்” போன்ற யோகங்கள் இருக்கிறது.
இவரின் இராசிக்கு 6-க்குரியவனான சூரியன் எட்டில் நீச்சம் அடைந்த
காரணத்தினால், “கெட்டவன் கெட்டிடில் கிட்டிம் இராஜயோகம்” என்ற ஜோதிட
வாக்குக்கு ஏற்ப பெரும் யோகத்தை சூரியன் வாரி கொடுத்தான்.
என்னுடைய அனுபவத்தில், ஒருவரின் ஜாதகத்தில் 3,6,11-ல் சனி இருந்தாலே அவர்கள் பெரும் பணக்காரர்களாக திகழ்கிறார்கள்.
இவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு
தர்மகர்மாதிபதியான சனி, 6-ல் உச்சம் பெற்று, லக்கினாதிபதியோடு சுக்கிரன்
சேர்ந்ததால் உலக புகழ் கிடைத்தது.
9,10-க்குரிய சனி, 3-க்குரிய சந்திரன் லாபத்தில் அமர்ந்ததாலும், அதனை செவ்வாய் பார்வை செய்து, “சந்திர மங்களயோக“த்தை கொடுத்தார்.
பொதுவாக சந்திரன் – செவ்வாய்
இணைந்திருந்தாலும், சந்திரன் – செவ்வாய் பார்வை இருந்தாலும், அத்தகைய
ஜாதகர்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள்.
ஜாதகத்தில் 3-ம் இடம், எழுத்துத் துறை –
புத்தகத் துறை ஆகியவற்றை குறிப்பிடுகிற இடமாகும். ஆகவேதான் எழுத்து
தொடர்புடைய கம்ப்யூட்டர் துறையில் பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்
பில்கேட்ஸ்.
அத்துடன் 11-ம் ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் பெரும் வெற்றியை கொடுக்கிறது.
எவர் ஒருவருக்கு பூர்வ புண்ணியஸ்தானம்
மற்றும் பாக்கியஸ்தானம் ஆகிய இரண்டும் வலுவாக இருக்கிறதோ, நான் உறுதியாக
சொல்வேன், அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு மற்ற யோகங்கள் ஜாதகத்தில் இருக்க
வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவர்கள் யோகசாலிகள். எந்த துறையில்
இருந்தாலும் அவர்களுக்கு பணம், மழையாக கொட்டும்.
தன – பஞ்சமாதிபதி புதன், பஞ்சம
ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, சந்திரன் சம சப்தமாக பார்த்து விட்டதால்,
இவருக்கு ஜாதக யோகம் – ஆலமரமாக விஸ்வரூபம் எடுக்கிறது.
லக்கினத்திலோ 5. அல்லது 9-ல் கேது இருந்தாலோ, தான – தர்மங்கள் செய்வதில் பெரும் சிறப்பினை அடைவார்கள் என்பது ஜோதிட விதி.
இவரது ஜாதகத்தில் லக்கினத்திலே கேது
அமர்ந்து, தரும காரியங்களை வாரி வழங்க செய்கிறார். சிலருக்கு காலனா
கிடைத்தாலே நாலனா ஆட்டம் போடுவார்கள். ஆனால் இவரோ உலகின் பெரும்
கோடீஸ்வரராக இருந்தும், அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் – பந்தாவாக இல்லாமல்
அமைதியாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம், லக்கினாதிபதி சுக்கிரன்,
சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆனதால் வீண் பெருமை, ஆடம்பர ஜம்பம் இல்லாமல்
அமைதியாக இருக்கிறார். என்பதே காரணம்.
அஷ்டம ஸ்தானத்தையும் – ஜீவன ஸ்தானத்தையும் – விரைய ஸ்தானத்தையும்
குருபார்வை செய்வதால், இந்த ஸ்தானங்கள் சிறப்பாக வலிமை பெறுகிறது.
பொதுவாக, “அந்தணன் தனித்து நின்றால் அபகீர்த்தி மெத்த உண்டு” என்ற ஜோதிட
சொல் இவரின் ஜாதகத்தில் மெய்யாகவில்லை.
அதாவது –
அந்தணன என்னும் குரு, ஒருவர் ஜாதகத்தில்
தனித்து நின்றால் அந்த இடம் நாஸ்தி ஆகிவிடும். அதாவது கெட்டுவிடும். ஆனால்
6,8,12.க்குரியவனாக குரு இருந்து, அவன் தனித்து நின்றால் அவன் அமரும்
பாவத்தை கெடுக்க மாட்டான்.
சரி. தற்போது கோச்சார ரீதியாக மீன
இராசிக்கு சனி 8-ல் அதாவது அஷ்டம சனியாக இருக்கிறரே, துன்பம் தருமா?
என்றால் தராது. காரணம், ஏற்கனவே கூறி இருக்கிறேன். 6,8,12-க்குரியவன்
6,8,12-ல் அமைந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுப்பான். இந்த கோட்சாரப்படி
இவர் உலக கோடீஸ்வர பட்டியலில் இன்னும் சற்று முன்னேறுவார்.
ஆகவே
ஜாதகங்கள் பொய்ப்பதில்லை. மடுவில் இருந்து மலை மீது நிற்பவர்களை போல
சிறப்பான வாழ்க்கை நிலையில் உயர்ந்து இருப்பவர்களை பார்த்தால் அவர்கள்
ஜாதகம்தான் பேசுகிறது.. சரி. நம்முடைய ஜாதகம் பேசுகிறதா என்று பார்ப்போம்.
அடுத்த பகுதியில் இன்னொரு புகழ் பெற்ற ஜாதகத்தை ஆராய்ந்து, ஜோதிட கிரக யோக சிறப்புகளை அறிவோம்.♦
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com