Friday, May 10, 2013

ஐஸ்வர்யாராய் ஜாதகம் என்ன கூறுகிறது?

பிறந்த தேதி 01.11.1973

 நடப்பு இராகு திசை – குருபுத்தி 05.09.2012 வரை

 ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் கன்னி லக்கினம் தனுசு இராசி. இவர் உலகபுகழ் பெற்றதற்கு ஜாதகரீதியான காரணம் என்ன?

 பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி 10-ல் இருந்தால் அல்லது 10-ம் இடத்தை பார்த்தால் உலகபுகழ் உண்டு. இவரின் லக்கின அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் உள்ளார். கீர்த்தி ஸ்தானம் தைரிய ஸ்தானம் என்று கூறும் 3-ம் இடத்தில் அமர்ந்து செவ்வாயால் பார்க்க பெற்றதால்தான் மனோ தைரியம், சாதிக்கும் திறமை படைத்தது. வாழ்க்கையில் போராடி வைராக்கியத்துடன் கலைத்துறையில் நுழைந்து பெயரும் பெற்றார். உலக அழகியாக கீர்த்தியும் பெற்றார்.

 ஜாதகத்தில் செவ்வாய் 2,4,7,8-.ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று கூறுவார்கள். இவருக்கு அங்காரக தோஷம் பாதிக்காது. ஏன் என்றால் தன் சொந்த வீடான மேஷத்தில் அமர்ந்ததால் அந்த தோஷம் அறவே பாதிக்காது.

 வாக்கு ஸ்தானத்தில் சூரியன் நின்றது நன்மையே. ஏன் என்றால் 12-.க்குடையவன் நீச்சம் பெற்றதால்தான் வாக்கு வன்மையால் எதையும் சாதிப்பார்.

 சூரியன் நீச்சம் பெற்றாலும் அந்த வீட்டிற்குடைய சுக்கிரன் 4-ல் சந்திரன் – இராகுவுடன் அமர்ந்துள்ளான். நீச்சம் பெற்ற சூரியன் அந்த வீட்டுக்குடைய சுக்கிரன் கேந்திரம் ஏறியதால் நீச்சபங்க இராஜயோக அடைந்தார். இதுவே உலக அழகி என்ற பட்டத்தை கொடுத்தது.

பொதுவாக எந்த ஜாதகத்திலும் கிரகங்கள் நீச்சம் பெற்று, இருந்தால் யோகம். இதனுடைய பலன் என்னவென்றால், வாழ்க்கையின் கடைசி வரை பெயரும் – புகழுமாக இருப்பார்கள்.

 ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் மகர குரு நீச்சம் பெற்று அதற்குடைய சனி 10-ல் இருப்பதும் நீச்சபங்க இராஜயோகமே.

 குழந்தை பாக்கியம் இருக்கிறதா?  

 இவருக்கு புத்திரபாக்கியம் நிதானமாகதான் ஏற்படும். புத்திர ஸ்தானத்தில் குரு நீச்சம் பெற்று அந்த வீட்டுக்குடைய சனி லக்கினத்திற்கு 10-ல் இருப்பதால் நீச்சபங்க யோகத்தால் புத்திர பாக்கியம் உண்டு. ஜாதகத்தில் சந்திரனும்  இராகுவும் இணைந்து சனி – கேதுவால் பார்க்கப்படுவதால் மனக்குழப்பம் கொடுத்துக் கொண்டிருக்கும். ஆன்மீகவாதியாக வாழ கூட விரும்புவார்.

 தற்காலம் இவருக்கு இராகு திசையில் குருபுத்தி நடப்பதால் இது நன்மையே செய்யும். தற்காலம் ஜென்மத்தில் இராகு இருப்பதால் பிரச்சினைகள் ஏதாவது வந்த வண்ணம் இருக்கும். ஆகவே உஷாராக இருக்க வேண்டும்.  

 திருமண களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவுடன் சேர்ந்துள்ளான். இது சற்று பாதிப்பு கொடுத்தாலும் களத்திரஸ்தானாதிபதி குரு நீச்சம் பெற்று நீச்சபங்க வளையத்தில் வந்ததால் கருத்து வேற்றுமை ஏற்படாமலும் பெரிய பாதிப்பு இல்லாமல் குரு தடுத்து விடுவார்.

 ஜென்மத்தில் உள்ள இராகுவால் தற்காலம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடல்நலனில் கவனமும், அக்கறையும் தேவை.

 துர்க்கை வழிபாடு மிக மிக முக்கியம். மே மாதம் குரு பஞ்சமஸ்தானம் என்கிற ஐந்தாம் இடத்திற்கு செல்வதால் வரும் மே மாதம் முதல் இவருக்கு தொழில் துறையில் யோகமே.

ஆனால் மறுபடியும் சொல்கிறேன் ஜென்ம இராகு விஷயத்தில் உடல் நலனில் கவனம் தேவை. மற்றபடி இவர் ஜாதகம் யோகத்தை வளர்க்கும் ஜாதகமே.


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved