Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
அப்படி எண்ணியதை போல பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பட்டதாரி ஆவார்களா?
எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால்
பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம் இடம் 9-ம் இடம் பலமாக இருக்க வேண்டும். அப்படி
இல்லை என்றால், வாத்தியார் பிள்ளையாக இருந்தாலும் வாத்துதான்.
4 -ம் இடம் – கல்வி, வாகனம், தாயார் போன்ற
விஷயங்களை அறிய வைக்கும் இடம். அதுபோல், 9-ம் இடத்தை முக்கியமாக பாக்கியம்
என்று கூறப்படும் சொத்து – சுகங்கள் பிள்ளைகளின் நற்குணம், உயர் கல்வி
போன்றவற்றை தெரிவிக்கும் இடம். இந்த இரண்டு இடங்களும் பலமாக இருந்தால்,
அதாவது லக்கினாதிபதி – ஐந்துக்குடையவன் போன்றவர்கள் மேற்கண்ட இடங்களில்
ஒருவரின் ஜாதகத்தில் அமர்ந்திருந்தால் நிச்சயம் கல்வி உண்டு.
ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் சனி,
ராகு, கேது இருந்தாலும் சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலும் கல்வி தடைபடும்.
கல்வியில் தள்ளு – தள்ளு என்று இவர்களை தள்ளிக் கொண்டு போக வேண்டும்.
உதாரணம் – மீன லக்கினம், 5க்குரிய சந்திரன் 9-ல் விருச்சிகத்தில் இருந்தால் உயர் கல்வி உண்டு.
சிம்ம லக்கினம், 4க்குரிய செவ்வாய் 9.-ல்
இருந்தாலும் குரு பார்வை பார்த்தாலும் உயர் கல்வி உண்டு. குறிப்பாக 4.-ம்
இடத்தில் 9.-ம் இடத்தில் 12.-க்குரிய கிரகம், 8க்குரிய கிரகம் அமர்வது
நன்மை இல்லை. கல்வி தடை செய்யும்.
ஆகவே பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே… உங்கள்
பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம்இடம், 9-ம் இடம் பலமாக இருந்தால் பயம்
வேண்டாம். உயர் கல்வி உண்டு. புகழோடு வாழ்வார்கள்.♦
Click For EnglishVersion
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com