Saturday, May 11, 2013

மனக்குழப்பம் -மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

வசதி வாய்ப்புகள் இல்லாமல் அதனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லா வசதிகள் இருந்தும் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இவர்களால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதி இழந்து கஷ்டப்படுகிறார்கள்.

மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள்.

ஒரு கதை ஞாபகம் வருகிறது.

ஒரு ஊரில், ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை செய்துக்கொண்டு, ஏதாவது உளரிக்கொண்டும், தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான். அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும் கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.

அவனை சோதித்து பார்த்த மருத்துவர், “எப்போதிலிருந்து தேவை இல்லாமல் இப்படி கவலையில் இருக்கிறீர்கள்”  எனக் கேட்டார்.

”டாக்டர், நான் ஒரு பெரிய குதிரையை விழுங்கியதில் இருந்து இப்படி எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது” என்றான்.

“என்ன….? குதிரையை விழுங்கினிர்களா? என்ன சொல்கிறீர்கள்? அதெல்லாம் சாத்தியம் இல்லை.” என்று மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் கேட்பதாக இல்லை.

சரி. இவன் போக்கிலேயே போக வேண்டியதுதான் என்று முடிவு செய்த மருத்துவர், அவனுக்கு மயக்க ஊசியை போட்டு, ஒரு மணிநேரம் படுக்க வைத்தார். அவனுக்கு மயக்கம் தெளிவதற்குள் ஒரு நிஜ குதிரையை பிடித்து வந்து மருத்துவமனை வாசலில் கட்டி வைத்தார்.

அவனுக்கு மயக்கம் தெளிந்தது. உடனே மருத்துவர் அவனிடம், “உங்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து,   நீங்கள் விழுங்கிய குதிரையை வெளியே எடுத்துவிட்டேன். வாசலுக்கு சென்று பாருங்கள் நீங்கள் விழுங்கிய குதிரை இருக்கிறது.” என்றார்.

அவனும் வாசலுக்கு வந்து பார்த்தான். உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவரின் அறைக்கு ஓடி வந்தான்.

“அய்யோ டாக்டர், அது நான் விழுங்கிய குதிரை இல்லை. நான் விழுங்கிய குதிரை  கருப்பு நிறம். நீங்கள் காட்டும் குதிரையோ வெள்ளை. அப்படி என்றால்…..? அய்யய்யோ… என் வயிற்றில் இரண்டு குதிரைகள் இருந்திருக்கிறது. ஏன் நீங்கள் கருப்பு குதிரையை எடுக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா?“ என கேட்க,  அதற்கு டாக்டர்,

“என்னால முடியல… இன்னிக்கு ஆஸ்பத்திரி லீவு.” என்று சொல்லி, வீட்டுக்கு கிளம்பினார்.

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே தங்களின் மனதை கட்டுப்படுத்திட யோகா, தியானம், வழிபாடு என சிந்தனையை நல்வழிப்படுத்த  பழகி கொள்ள வேண்டும்.

என்னதான் மருத்துவரிடம் அழைத்து சென்றாலும், நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது.

சரி. ஜாதகப்படி யார் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு, அவர்கள் அதற்கான   எளிய பரிகாரம் செய்து நிம்மதி பெறலாம்.

ஜாதகப்படி மனஅழுத்தம் யாருக்கு ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஒரு ஜாதகத்தில், மனக்காரன் எனப்படும் சந்திரன், பகை – நீச்சம் பெற்று இருந்தாலோ, சனியுடன் கூடி இருந்தாலோ அந்த ஜாதகருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

சந்திரனை, 6,8,12-க்குரியவன் பார்வை செய்தாலும், சந்திரன், 6,8,12- க்குரியவனுடன் இணைந்திருந்தாலும், மன குழப்பம் – மன அழுத்தம் ஏற்படும்.
சந்திரன், இராகு – கேதுவுடன் சேர்ந்தாலும் இதே நிலைதான்.

5-ம் இடத்தில் பாபிகள் எனப்படும் செவ்வாய், சனி, கேது, இராகு, சூரியன் தனித்து இருந்தாலும் – பார்த்தாலும், மனகுழப்பம் – மன அழுத்தம் ஏற்படும்.

இதற்கு விமோசனம்தான் என்ன?

இப்படிப்பட்ட ஜாதகர்கள் 2 நிமிடம் நல்லவற்றை எண்ணி தியானம் செய்ய வேண்டும். அதாவது,

“என் மனம் அமைதியாக இருக்கிறது, ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது, எதையும் சாதிப்பேன், எனக்கு எல்லோரும் நண்பர்களே, எல்லோருக்கும் அன்பானவராக இருப்பேன், எனக்கு எந்த துன்பம் வந்தாலும் இறைவன் என்னை காப்பாற்றுவார், நானும் என்னால் ஆன உதவிகளை பிறருக்கு செய்வேன்.“

என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டால், மனதில் உறுதி ஏற்படும். மனகுழப்பம் – மனஅழுத்தம் – சோர்வு யாவும் மறைந்து விடும். எதையும் சாதிப்போம் என்ற மனஉறுதி வந்துவிட்டால், மலையளவு துன்பங்களும் பனிபோல கரைந்து போகும்.

பரிகாரம் 

திங்கள் அன்று அம்பாளை வணங்குங்கள். சந்திரனுக்கு உகந்த தெய்வம் அம்மன்தான். திங்கள்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணியலாம். அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறிய அளவிலாவது வெள்ளை நிறம் இருப்பது நல்லது.  நெல் தானியத்தை ஒரு கைபிடி அளவு பறவைகள் -காக்கைகளுக்கு  வைக்க வேண்டும்.

வலது கை மோதிர விரலில் முத்து மோதிரம் அணியலாம்.  பசு மாடுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன அமைதி ஏற்படும். புத்தி தெளிவு பெறும். புத்தி தெளிவாக இருந்தாலே அனைத்து காரியங்களும்  நடக்கும்.

இங்கே தரப்பட்டுள்ள சந்திர பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை மனபாடம் செய்துக்கொண்டு, உங்கள் மனதுக்குள்ளேயே தினமும் உச்சரித்து வாருங்கள். மனம் அமைதி பெறும் – நன்மைகள் தேடி வரும்!.

ஸ்ரீசந்திரகாயத்ரீமந்திரம்
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி!
தந்தோ
 ஸோம ப்ரசோதயாத்!


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved