Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
மலர்கள் உள்ள கொடிகள், பழங்கள் உள்ள
மரங்கள் எப்படி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதோ அதை போலவே திருமணம் செய்துக்
கொண்டு குடும்பமாக இருக்கும்போது கிடைக்கும் மதிப்பு, மரியாதை
அற்புதமானது. லட்சாதிபதியாக இருக்கலாம், கோடீஸ்வரராக இருக்கலாம் ஆனால்
வாடகை வீட்டில் இருந்தால் மதிப்பு குறைவுதான். சாதாரண தொழிலாளியாக
இருந்தாலும் அவனுக்கு சிறு வீடு அது சொந்த வீடு என்றால் அதனுடைய மதிப்பே
வேறு. அதைப்போலவே தனி மரமாக இருப்பதைவிட தோப்பாக இருக்க வேண்டும்.
சிலர் கை நிறைய சம்பாதிப்பதால் திருமணத்தை
தள்ளிப் போடுகிறார்கள். சிலர் சுதந்திரமாக இருக்க வேண்டும், யார்
கட்டுப்பாட்டிலும் இருக்கக் கூடாது என்று திருமணத்தை தள்ளிப்
போடுகிறவர்களும் உண்டு. இப்படி திருமணத்தை தள்ளிப் போடுவதன் காரணம் என்ன
என்று ஜோதிட ரீதியாக பார்த்தால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ம் இடம்
என்று கூறப்படும் களத்திரஸ்தானம் கெட்டிருந்தால் அல்லது களத்திரகாரகன்
சுக்கிரன் கெட்டிருந்தால் திருமணம் தடைப்படுகிறது. தாமதப்படுகிறது.
பொதுவாக காளசர்ப்பயோக ஜாதகம், திருமணத்தை
தாமதப்படுத்துகிறது. அதாவது இராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும்
இருந்தால் வயது 33-க்கு மேல்தான் திருமணம் நடக்கிறது. 2-ம் ஸ்தானத்தில்
சூரியன், இராகு, கேது, செவ்வாய் அல்லது 7-ம் ஸ்தானத்தில் தனித்து சூரியன்
யாருடனும் சேரமல் இருந்தால் திருமணம் தாமதப்படுகிறது.
7-க்குரியவன் மறைந்தாலும் திருமணத்தை தாமதம் செய்கிறது.
அதாவது ரிஷப லக்கினமாக இருந்து, செவ்வாய்
12-ல் மறைந்தாலும் தாமத திருமணம். என்னதான் திருமணம் தாமதம் ஏற்பட்டாலும்
குடும்பஸ்தானத்தை குரு பார்த்தால், பூர்வீக புண்ணிய ஸ்தானத்தை அதாவது
புத்திர ஸ்தானத்தை குரு பார்த்தால் தடை ஏதும் இல்லாமல் திருமணம் நடக்கும்.
பொதுவாக 7-ம் இடம் வலுத்து இருந்தால் பயமில்லை.
அதாவது, 7-ல் சூரியன்-புதன்,
சூரியன்-சுக்கிரன்-ராகு அல்லது கேது என்று இப்படி பாபிகள் அமர்ந்தாலும்,
குரு பார்வை இருந்தால், சுபர் சேர்க்கை, சுபர் பார்வை இருந்தால் திருமணத்தை
நடத்தி வைக்கும்.
குடும்ப சூழ்நிலை காரணமாகவும், கைநிறைய
சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையாலும் பல பெண்கள் திருமணத்தை தள்ளிப்
போடுகிறார்கள். சிலரோ படித்து ஒரு வேலையில் சேர்ந்து திருமணம் செய்து
கொள்ளாமல் சொந்த வீட்டை வாங்கிவிட்டு அதற்கு மாத மாதம் EMI கட்டுவதும்,
தங்கை, தம்பிகளை கரையேற்றுவதுமாக இருந்தால், பிற்காலத்தில் அவர்களே
திருமணத்தை தள்ளி போட்டு தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணும்படி ஆகிவிடும்.
ஆகவே, படிப்பும் வேலையிலும் அதனால்
கிடைக்கும் வசதிகளிலும் மூழ்கி திருமணத்தை மறந்து பிற்காலத்தில் தனி மரமாக
நிற்காதீர்கள். எல்லோருக்கும் திருமண நேரம் அமையும். அந்த நல்ல நேரத்தை
தள்ளி போட வேண்டாம்.
உங்களுக்கு தாமத திருமணம் அமைகிற ஜாதகமாக
இருந்தால் அதற்கு பரிகாரம் ஆகக் கூடிய திருக்கோயில்கள் எங்கிருந்தாலும்
தேடி சென்று பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். அம்பாள் அருளால் திருமணம் ஜாம்
ஜாம் என்று நடக்கும்.
முக்கியமாக பெற்றோர்களே, பிள்ளைகளுக்கு
திருமண வயது வந்துவிட்டால் அவர்களுக்கு என்று ஒரு குடும்பத்தை அமைத்து தர
முயற்சியை தொடங்குங்கள். இதைவிட வேறு ஒரு முக்கியமான கடமையும் வேலையும்
உங்களுக்கு இருக்க முடியாது.!
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com