Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
அதற்காக அவர்கள் சோர்ந்து துவண்டு விரக்தி
அடைய கூடாது என்பதற்காகதான், வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின்
ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து பார்க்கிறோம். இவர்களின் ஜாதகத்தில்
உள்ள சிறப்புகளை போல உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில்
நல்ல லாபகரமான முன்னேற்றத்தை நிச்சயம் பெறுவீர்கள்.
தோல்வி உங்களை விரக்தி அடைய வைக்க கூடாது.
நீங்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்கிற தன்னபிக்கையை
தருவதுதான் இந்திய ஜோதிட சாஸ்திரம். ஜோதிடத்தை சிலர் மூட நம்பிக்கையாக
கருதினாலும் உங்கள் வாழ்க்கை பயணத்தில் உள்ள தடைகளை முனகூட்டியே சொல்லி
உங்களை உஷார்படுத்தி அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கு வழியும்
ஆலோசனையும் தருகிறது ஜோதிடம் என்பதே உண்மை.
சரி இப்போது ஜாக்கிசான் ஜாதக பலன்களை பார்ப்பதற்கு முனனதாக அவருடைய ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை பார்ப்போம்.
-
கிரகமாலிகா யோகம்.
- கெஜகேசரி யோகம்.
இதில் கிரகமாலிகா யோகம் என்பது எத்தகைய
சிறப்பு என்று பார்க்கும் போது, உலக புகழையும் பெரும் செல்வத்தையும்
கொடுத்து பல கோடி சொத்துகளை தானே வந்தடையும் சிறப்பை தரும் யோகமாகும் இது.
குருவும்
சந்திரனும் இணைந்திருந்தால் அது கெஜகேசரி யோகம் எனப்படும். பல
பிரச்சனைகளை, எண்ணற்ற தடைகளை தகர்தெரிந்து வாழ்க்கையில் முடிசூடா மன்னராக
வாழ்வார்கள். இத்தகைய யோகம் ஜாக்கிசான் ஜாதகத்தில் இருக்கிறது.
பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சனி 10-ல்
இருந்தாலும் 10-ம் இடத்தை சனி பார்த்தாலும் ஒரு மக்கள் கூட்டம்
அவர்களுக்காக இருக்கும் – உலக புகழ் தரும் என்பது ஜோதிட விதி. இவருடைய
ஜாதகத்தில் லக்கினத்திற்கு அதிபதி சனி, உச்சம் பெற்று 10-ல் இருக்கிறது.
ஒருவருடைய ஜாதகத்தின் 4-ம் இடம், கல்வியை
பற்றி அறிய வைக்கும் இடமாகும். கல்வி மட்டுமல்லாமல் ஒருவருடைய வீடு, நிலம்,
தாய் போன்ற விஷயங்களையும் ஒரு ஜாதகத்தின் நான்காம் இடத்தை கணித்து அறிய
இயலும். இவருடைய ஜாதகத்தின்படி கல்வியை பற்றி கூற வேண்டும் என்றால், இவர்
ஜாதகத்தில் சனி 4-ம் இடத்தை பார்ப்பதால் தடைப்பட்ட கல்வியை தருகிறது. அதே
சனி கிரகம் இவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று லக்கினத்திற்கு அதிபதியாகவும்
இருப்பதால் சொத்துகளை வாரி வழங்கும்.
லக்கினத்திற்கு ஒன்பதுக்குரிய புதன்
இரண்டாம் இடத்தில் இருப்பதால் பேச்சு திறமையால் தொழில் செய்து
முன்னேறுவார். ஒரு ஜாதகத்தின் மூன்றாம் இடம், கீர்த்தி – தைரியம் இவற்றை
காட்டுகிற இடமாகும். ஜாக்கிசான் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம்
இடத்தில் சூரியன் இருப்பதால் மகா தைரியசாலியாக இருப்பார். கீர்த்தி என்கிற
புகழுக்கும் பஞ்சமில்லை.
இவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு
எட்டாம் இடத்திற்கு உரியவன் இந்த சூரியன். அவர் லக்கினத்திற்கு மூன்றாம்
இடத்தில் இருக்கிறார் என்று சொன்னேன். இந்த மூன்றாம் இடம் மறைவான இடம்
என்பது ஜோதிட கருத்து. அதன்படி பார்த்தால் இந்த கிரக நிலையும் பெரும்
யோகமாக அமைகிறது. அதிரடி மன்னர் என்கிற பெயரை தந்தவர் இந்த சூரியன்தான்.
இவருடைய ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். இது – வயதாக வயதாக யோகம் பெறும் நிலையை காட்டுகிறது.
இவர் பூர்வ புண்ணியம் செய்தவர். எப்படி
என்றால், இவருடைய ஜாதகத்தில் ஐந்தில் குருவும் சந்திரனும்
சேர்ந்துள்ளார்கள். பூர்வ புண்ணியம் பலம் பெறுகிறது. இதனால் எப்பேர்பட்ட
தொல்லைகளை இவருக்கு எதிரிகள் தந்தாலு, அப்படி தொல்லை தருபவன்தான் அழிவான்
என்கிறது இவர் ஜாதகம்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு
ஏழாம் இடம் திருமண வாழ்க்கையை காட்டுகிற இடம். இவருடைய ஜாதகத்தில் அந்த
ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் இருக்கிறார். அந்த சந்திரன் ஐந்தில்
இருப்பதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சுபிச்சமாக இருக்கும். மனைவியாக
அமைந்தவருக்கும் சொத்துகள் இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் பதினோன்றாம் இடம்
லாபஸ்தானம் எனப்படும். இந்த இடத்தை குருவும் சந்திரனும் பார்வை செய்வதால்
அரசியலில் இவர் ஈடுபட்டாலும் புகழ் பெறுவார். இவர் ஜாதகத்தில் ஆறாம்
இடத்தில் கேது, பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாய் மற்றும் இராகு இருப்பதால்
தெய்வபக்தி உடையவர். தானதர்மங்களை விருப்பத்துடன் செய்வார். தன்னை
ஏமாற்றியவர்களையும் துரோகிகளாக கருதாமல் மன்னித்து விட்டு விடுவார்.
எல்லாம் இறைவன் செயல் என்று ஒரு ஞானியைபோல் பேசுவார். இறைவன் மீது
நம்பிக்கை அதிகம் உண்டாகும்.
பொதுவாக ஜாதகத்தில் இராகு – கேது
இவைகளுக்கு மத்தியில் எல்லா கிரகங்களும் அடங்கி இருந்தால் அதை காளசர்ப்ப
யோகம் என சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். வயது 32-க்கு மேல் படிப்படியாக
முன்னேற்றம் உண்டு.
திருமணத்திற்கு பின் மேலும் வேகமான முன்னேற்றம்
கொடுத்திருக்கும்.
இவர் ரிஷப இராசிகாரர். தற்காலம் சனி
ஐந்தில் இருந்து டிசம்பர் மாதம் ஆறாம் இடத்திற்கு வருவதால் எதிர்பாராத
பெரும் இராஜயோகம் உண்டு.
லக்கினத்திற்கு அதிபதி 10-ல் இருப்பதால்
தொழில்துறையில் சாதனைபடைப்பார். கலைத்துறை மட்டும் இல்லாமல் தொழில்சாலைகள் –
இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட தொழில்களையும் இவர் செய்து கொண்டிருப்பார்.
வாசகர்களே… இவரை போல யோகங்களில் சில உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் நிச்சயம் வாழ்க்கை பயணம் வெற்றிதான்.
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com