Sri
Durga Devi upasakar, V.G.Krishnarau.
பிறந்த தேதி – 10.8.2007
பிறந்த நேரம் – 21.22 P.M.
பிறந்த இடம் – சென்னை
இராசி – மிதுனம்
இலக்கினம் – மீனம்
நட்சத்திரம் – புனர்பூசம், 2-ம் பாதம்
தற்போது நடக்கும் திசை,புக்தி – குரு திசை சுக்கிர புக்தி – 11.07.2011 வரை. பிறகு சூர்ய புக்தி – 28.04.2012 வரை.
குழந்தை தியாவின் ஜாதகத்தில் மீன லக்கினம்
மிதுன இராசி. மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் துருதுரு என்று இருப்பார்கள்.
சுகஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் நல்ல கல்வி, அழகிய தோற்றம் தரும்.
பொதுவாக லக்கினத்திற்கு 4-ம் இடம் தாய், கல்வி, வீடு, வாகனம் போன்றவற்றை
குறித்து சொல்லும் இடம். இந்த இடத்தில் பூர்வ புண்ணியாதிபதி சந்திரன்
அமர்ந்ததால் இந்த குழந்தைக்கு உயர் கல்வி, நல்ல அழகிய வீடு, சொத்துக்கள்
நன்கு அமையும்.
தாய் ஸ்தானமான 4-ம் இடத்தில் சந்திரன்
இருந்து அந்த ஸ்தானத்திற்கு இரண்டில் சூரியன் – புதன் அமர்ந்து சிவயோகம்
கொடுத்ததால் குழந்தையின் தாயாராகிய திருமதி. ஜோதிகா, நல்ல பேச்சாற்றல்
கொண்டவர். இந்த சிவயோகம் குழந்தைக்கும் நல்ல புகழ் தரும்.
தாயார் ஸ்தானமான 4-ம் இடத்திற்கு 10-ம்
இடம் தொழில் ஸ்தானம். இதை குரு 5-ம் பார்வையாக பார்ப்பதால், ஜோதிகா
கலைத்துறையில் மறுபடியும் பிரவேசிப்பார். காரணம், 11.07.2011 முதல்
28.4.2012 வரை குருதிசை சூரிய புத்தி நடக்க இருப்பதால் இந்த காலகட்டத்தில்
ஜோதிகா மறுபடியும் கலைதுறையில் பிரவேசிப்பார். புகழ் அடைவார்.
லக்கினத்திற்கு 9-ம் இடம் தந்தை ஸ்தானம்.
சூர்யாவை பற்றி அறிய இந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 9-ல் குரு
இருந்து அதற்கு 10-ல் சுக்கிரன், சனி, கேது இருக்கிறார்கள். பொதுவாக ஒரு
ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10-ல் சனி இருந்தால் அல்லது சனி பார்த்தால் உலக புகழ் உண்டு.
தந்தையின், பாக்கியம் – தெய்வ பக்தி அறிய
9-ம் இடம் பார்க்க வேண்டும். இதில் சூர்யாவின் வீடான 9-ம் இடத்தில் இருந்து
சனி 10-ல் இருப்பதால் சூர்யா உலக புகழ் பெற்றார்.
9-ம் இடத்திற்கு 9-ம் இடத்தில் சூரியன்
புதன் அமர்ந்துள்ளதாலும் 10-க்குடையவன் 11-க்குடையவன் இணைந்ததாலும்
நிலவிளைவு யோகம் என்று கூறுவர்.
அதாவது – ஜாதகியின் தந்தைக்கு அதிக அளவில் நில புலன்கள் அமையும். ரியல் எஸ்டேட் தொழிலும் பெருத்த லாபத்தை கொடுக்கும்.
9-ம் இடத்திற்கு நேரில் செவ்வாய்
அமர்ந்து, “குருமங்கள யோகத்தை தருகிறது. இதன் பலன், சூர்யாவிற்கு
எதிர்பாராமல் எல்லாம் நடக்கும். குழந்தையின் ஜாதகப்படி தந்தை ஸ்தானத்திற்கு
ஏழாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் சூர்யா உணர்ச்சி வசப்படுபவர். கொஞ்சம்
முன்கோபமும் இருக்கலாம். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும்
இருக்கும். குழந்தையின் லக்கினத்திற்கு 5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம்.
இது ஜாதகியின் தாத்தாவின் (தந்தையின் தந்தையை பற்றி அறிய வேண்டும் என்றால்
5-ம் இடம் பார்க்க வேண்டும். தாயின் தந்தையை பற்றி அறிய 12-ம் இடம் பார்க்க
வேண்டும்.) இடம். அதாவது சூர்யாவின் தந்தை திரு.சிவகுமார் அவர்களை பற்றி
5-ம் இடம் கணித்து பார்க்கலாம். இவருக்கு 2-ல் சுக்கிரன், சனி கேது
இருப்பதால்தான் கலைத்துறை தொழிலாக அமைந்தது. புகழும் பெற்றார். பொதுவாக
வாக்கு ஸ்தானத்தில் சனி, கேது அமர்ந்தால் தெய்வீகம், தத்துவம், ஆன்மிகம்
போன்றவை எளிதாக அமையும்.. (திரு. ரஜினிகாந்த் ஜாதகத்தில் 2-ல் சனி – கேது)
இவர்கள் ஆன்மிகவாதிகள். திரு.சிவகுமார் வருங்காலத்தில் ஒரு சிறந்த
ஆன்மிகவாதியாக திகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதில் ஒன்றும் இல்லை.
பொதுவாக ஒரு லக்கினத்திற்கு 3,6,11-ல்
செவ்வாய் இருந்தால் உடற்பயிற்சி, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு வைத்து
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள்.
திரு. சிவகுமார் அவர்களின் இடத்திற்கு
11-ல் செவ்வாய் இருப்பதால் யோகா, தியானம் செய்து உடலை நன்கு வைத்துக்
கொள்வார். கடைசி வரை யோகமாக இருப்பார்.
குழந்தையின் ஜாதகத்திற்கு 12-ம் இடம்
சயனஸ்தானம் என்றும் விரய ஸ்தானம் என்றும் தந்தையின் தாயார் இடம் என்றும்
(குழந்தையின் பாட்டி) அறியலாம். இதை கணித்தால் சூர்யா அவர்களின் தாயை பற்றி
கூறலாம்.
இவருடைய தாய் ஸ்தானத்தில் இராகு இருந்து
அதற்கு 4-ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் அயராத உழைப்பு உண்டு. பொறுமை,
நிதானமுடையவர். இவருக்கு 7-ல் சுக்கிரன், சனி கேது இருப்பதால் விநாயகர்
வழிபாடு மிக மிக அவசியம். இவர் விநாயகர் வழிபாட்டை தவறாமல் செய்து வந்தால்
உடல் நலத்தோடு இருப்பார். மனதில் சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
குழந்தைக்கு தற்காலம் 28.4.2012 வரை குரு
திசை சூரிய புத்தி நடப்பதால் இந்த கால கட்டத்தில் சூர்யா அவர்கள் புகழ்
மேலோங்கும். திருமதி ஜோதிகா அவர்கள் கலைத்துறைக்கு மறுபடியும் வருவார்
என்கிறது இந்த ஜாதகம்.
குழந்தையின் ஜாதகப்படி குருமங்கள யோகம்,
சிவயோகம், 12-க்குரிய சனி 6 -.ல் அமர்ந்ததால், “கெட்டவன் கெட்டால்
கிட்டிடும் இராஜயோகம்“ என்பது ஜாதக தத்துவம். இந்த சனி பகவானே குழந்தைக்கு
இராஜயோகத்தை கொடுப்பார். வாழ்க வளமுடன்.
Read This Article In English
Matrimony
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
http://bhakthiplanet.com/ebooks/
For
Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number:
98411 64648, Chennai, Tamilnadu,
India
For
Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com