Wednesday, June 10, 2020

ஜாதகத்தில் சூரியன்–சுக்கிரன் சேர்க்கை நன்மையா தீமையா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணை இல்லாமல் சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லைவாழ்க்கையில் பல பிரச்சினைகள்ஏமாற்றங்கள் தருகிறதுகாட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும்சின்ன விஷயத்திலும் இன்னல் தரும்காரணம்சூரியன் நெருப்புசுக்கிரன் நீர்நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா.

நெருப்பிலே தண்ணீர் பட்டால் சுர்ரென்று சப்தம் வருமே அதை போலஇவர்கள் சும்மா இருந்தாலும் சுர்ரென்று கோபம் வரும்படியான செயல்களை சிலர் இவர்களுக்கு செய்வார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் – சுக்கிரன் மட்டும் ஒரு இராசியில் இணைந்து இருந்தால்குடும்ப வாழ்க்கையில் எதிரும் புதிருமாக சில நேரம் இருக்கச் செய்யும்அதனால் இதுபோல கூட்டு கிரகம் உடையவர்கள் குடும்ப வாழ்க்கையில் சற்று விட்டு கொடுத்து அனுசரித்து போவதுதான் நல்லதுகாரணம், “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று பல நேரங்களில் வாதிடுவது இவர்களின் வழக்கம்இந்த விட்டு கொடுக்காத தன்மையால் ஏன் பிரச்னை வராது.?

சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக உள்ள ஜாதகர்களின் திருமணம்தொழில்உத்தியோகம் எல்லாமே எதிர்பாராமல் நடக்கும்இவர்கள் சற்று நிதானமாக சமயோசிதமாக எதையும் செய்ய வேண்டும்வரவு எட்டணா – செலவு பத்தணா என்ற கதை ஆகிவிடும்ஆகவே வரவு-செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது.

இவர்கள் மீது குறை கூற முடியாதுஎதையும் நம்பக்கூடியவர்கள்அதிதைரியமாக செய்துவிட்டு நஷ்டபட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

சூரியன்-சுக்கிரன் கிரக சேர்க்கை உடையவர்களுக்கு தாமத திருமணம்திருமண வாழ்க்கையில் சஞ்சலம் ஏற்படுகிறதுகாரணம் என்னவென்றால்களத்திரக்காரகன் சுக்கிரன்சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆவதால் திருமணம் தாமதம் (வீண் சஞ்சலம் உண்டாக்கும்.

இப்போது லக்கினத்தில் இருந்து இந்த கூட்டணியை பார்ப்போம்.

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறதுகௌரவம் கெடும்படி ஏதாவது செய்ய வைக்கிறது.

லக்கினத்திற்கு 2-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவுகண் பார்வையில் குறை தரும்தேவை இல்லாமல் விரையம் செய்கிறதுகோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வந்துமற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள்.

லக்கினத்திற்கு 3-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும்அதிக அலைச்சலை கொடுக்கும்பயணம் அதிகம் உண்டுதற்பெருமை பேச வைக்கும்மகாதைரியம் தரும்.

லக்கினத்திற்கு 4-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவைவீடு-மனை நிதானமாக அமையும்கல்வி தடை ஏற்பட வாய்ப்புண்டுவயிற்று சம்மந்தப்பட்ட தொல்லை கொடுக்கும்தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும்.

லக்கினத்திற்கு 5-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு நிதானமாக காலங்கடந்து கொடுக்கும்மனஉலைச்சல் உண்டாகும்நித்திரையை கெடுக்கும்தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும்.

லக்கினத்திற்கு 6-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும்தேவை இல்லா கடன் பெருக செய்யும்ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும்எதிரிகளை உருவாக்கும்கவனமும்நிதானமும் தேவை.

லக்கினத்திற்கு 7-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும்கல்யாணம்காலங்கடந்து நடக்கும்நண்பர்களால் விரையங்கள் உண்டுஅரசாங்க விஷயத்தில் கவனம் தேவைகூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும்.

லக்கினத்திற்கு 8-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடி கொடுக்கும்ஆனால் ஆயுளுக்கு பயமில்லைவழக்கு வீண் விவாதங்கள் உண்டாக்கும்எச்சரிக்கை தேவைமறைமுக தொல்லைகள் வரும்.

லக்கினத்திற்கு 9-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை உருவாக்கும்சொத்து வாங்கும் விஷயத்தில் வில்லங்கம் உண்டாக்கும்மேல் படிப்பு சற்று தடைசெய்யும்தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும்.

லக்கினத்திற்கு 10-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவை இல்லா பிரச்சினை உண்டாக்கும்முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும்வாக்கு பலிதம் கொடுக்கும்.

லக்கினத்திற்கு 11-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்ய வைக்கும்உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிக்க வைக்கும்சதா சிந்தனையை தூண்டும்தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும்அயல்நாடு விஷயத்தால் செலவு வைக்கும்.

லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும்செலவுகள்விஷம் போல ஏறும்பக்தி அதிகரிக்க செய்யும்நன்மைகள் செய்தாலும்தீமைகள் வந்தடையும்மனச்சஞ்சலம் உண்டாகும்.

சரிஇந்த சூரியன்-சுக்கிரன் இணைவதால் நன்மை செய்ய வில்லை – லாபம் தரவில்லை என்றாலும் பரவாயில்லைஆனால் தீமையை உண்டாக்குகிற இந்த கிரகதோஷத்தை தடுக்க முடியுமாஎன்றால் முடியும்.

மோதிர விரலில் பச்சைகல் எமரால்டு (Emerald) அல்லது  சாதாரண பச்சை கல் இருந்தாலும் பரவாயில்லைஅதை வெள்ளியில் Open Setting  செய்து அணிந்து கொண்டால்பிரச்னைகள் சற்று குறையும்பிரதி ஞாயிறுதோறும்கிரக வழிபாட்டில் சூரியனுக்கு முக்கியதுவம் தந்து அர்ச்சனை-ஆராதனை போன்ற சூரியனுக்குரிய பரிகாரங்கள் செய்தால் நன்மை தேடி வரும்.  அதுபோலபெயர் எண்ணை பிறந்த தேதிக்கு ஏற்ப அமைத்துக் கொண்டால் துன்பங்கள் தூசுபோல பறக்கும்நல்ல வாழ்க்கை அமையும்வாழ்த்துக்கள்.!

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


 
For Astrology Consultation


Sri Durga Devi upasakar,


Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com





© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved