Friday, January 23, 2015

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் சிறப்பு கட்டுரை


17.2.2015அன்று மகாசிவராத்திரி

Written by Niranjana

சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மைniranjanaயை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.

வேடன்

சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவி ஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள்.

நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.

முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது. வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது.

என்னை கொல்வதற்கு முன்மேலும் படிக்க