Tuesday, January 13, 2015

வசந்தமான வாழ்வை தரும் மகிமை நிறைந்த தை அமாவாசை சிறப்பு கட்டுரை





Written by Niranjana

20.01.2015 அன்று தை அமாவாசை!
 
தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும்

கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும்.

அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம்.

இவ்வாறு, இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும்.

அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.

ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன் தோன்றி,  “முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன்மேலும் படிக்க