Saturday, October 20, 2018

ஜோதிடம் - மனநிம்மதி இல்லாதவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ஆம் –

நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, கேது, இராகு ஆகிய இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று 4-ம் இடத்தில் இருந்தால் அவர்கள் குழப்பவாதிகளே, சந்தேகப் பிரானிகளே. ஒருவேலை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று சதா நிம்மதி இல்லாமல் குழம்பிக்கொண்டு இருப்பார்கள்.

4-ம் இடத்தில் இந்த பாபகிரகங்கள் நல்ல சாரத்தில் இருந்தால் பயமில்லை, பாதகமுமில்லை. ஆனால் பகை சாரத்திலோ, 6,8,12-க்குரிய சாரத்திலோ இருந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க குழப்பம் கோவிந்தசாமிதான்.

சரி- இதற்கு தீர்வு என்ன?

யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம். ஆம், ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கேற்ற மந்திரம் ஜபிக்க வேண்டும். அதைபோலவே நம்முடைய பிறந்த தேதிக்கு ஏற்ப நம் பெயர் மந்திரம் அதாவது நல்ல ஆதிக்கத்தில் பெயர் எண் இருந்துவிட்டால் மனக்குழப்பம், தேவையில்லா சந்தேகம் தீரும். மன அமைதி முழுமையாக பெறாவிட்டாலும் நல்ல சிந்தனை, திட நம்பிக்கை உருவாகும். வாழ்க வளமுடன்!.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved