Sunday, March 22, 2015

திருமண தடை நீக்கும் பங்குனி உத்திரம் சிறப்பு கட்டுரை!



Written by Niranjana

03.04.2015  அன்று பங்குனி உத்திரம்.

திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்

இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண தடை அகலும். மணவாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலோ அல்லது பிரிந்த கணவனோமனைவியோ பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம், பௌர்ணமியும் சேரும் பங்குனி உத்திரம் என்று அழைக்கும் இந்த நன்நாளில் இறைவனின் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் வாழ்க்கையில் நல்ல மாற்றமும், குடும்பம் ஒன்று சேரும் காலமும் வரும்.

ஸ்ரீ நாராயணருக்கும் மகாலஷ்மிக்கும் திருமணம் நடந்தது இந்த பங்குனி உத்திரம் தினத்தில்தான். குபேரனிடம் கை நீட்டி கடன் பெற்றவராக இருந்தாலும் அலைமகள் மனைவியாக  அமைந்த காரணத்தால் பணக்கார கடவுளாகவே மாறிவிட்டார்.

நந்தி பகவான் திருமணம்  

தன் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க பல மெட்ரிமோனிகளுக்கு சென்று விண்ணப்பிக்கும் காலம் இது. இந்த காலம் போல் சிவபெருமான்,  தன் பிள்ளையாக நினைக்கும் நந்தி தேவருக்கு திருமணம் செய்ய தேவர்களை அழைத்து பெண் பார்க்க சொன்னார். “வரம் கொடுக்கும் ஈசனாலேயே தன் மகனுக்கு பெண் பார்க்க முடியாவிட்டால் நாங்கள்மேலும் படிக்க