Sunday, May 5, 2019

5 இராசிக்காரர்களே…. உஷாராக இருங்கள்


Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG

07/05/2019 செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் மிதுன இராசிக்கு போகிறது. மிதுன இராசியில் ஏற்கனவே இராகு இருக்கிறார்.

இப்பொழுது இராகுவுடன் செவ்வாயும் சேர்க்கை ஆகிறது. கேட்கவே வேண்டாம், பிரச்னைகளை அதி தீவிரப்படுத்தப் போகிறது. சரி, இப்போது யார் யாருக்கு செவ்வாய் பாதகம் செய்யப்போகிறது என்று பார்த்தால் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஐந்து இராசிக்காரர்களை புரட்டி எடுக்க போகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி.

இதுவரை நான் நெகட்டிவாக எழுதியதில்லை. இப்போது செவ்வாய் சஞ்சாரம் சரியில்லாமல் இருப்பதால் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. 5 இராசிக்காரர்கள் மிக,மிக உஷாராக, கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன இராசியில் செவ்வாய், இராகுவுடன் சேர்ந்து எட்டுக்குடையவன் சனி பார்வை பெற்றதால் உடல்நலனில், வழக்கு விவகாரத்தில், தேவையில்லாத வீண் பேச்சுக்களில் கவனம் தேவை. சுகஸ்தானத்தை செவ்வாய் பார்வை செய்வதால், உடல்நலனில் கவனம் தேவை. கட்டுமான விஷயத்தில் பிரச்னை வரலாம். அதாவது வீடு கட்டுவதில் கூட கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதில் மிக,மிக பொறுமை தேவை. 07/05/2019 முதல் 24/06/2019 வரை பொறுமையாக, கவனமாக இருங்கள்.

கன்னி இராசி: கன்னி இராசிக்கு 3,8 க்குரிய செவ்வாய், 10-ல் இருப்பதும், அதோடு இராகு சேர்ந்து 6-க்குரிய சனி பார்வை பெறுவதும் நன்மை இல்லை. 10-ல் இருக்கும் செவ்வாய், ஜென்மத்தை பார்வை செய்வதால், உடல் அனலாய் கொதிக்கும். வெப்பத்தால் வரக்கூடிய நோய்கள் தாக்கும். வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்னை அதிகரிக்கும். பெயர், புகழ் கெடுக்கும்படியான சூழ்நிலை உருவாகும். ஆகவே பொறுமை தேவை. படிப்பில் தடை, உத்தியோகத்தில் பிரச்னை அல்லது பிரமோஷனில் தடை, தாயாருக்கு உடல் நலனில் பாதிப்பு, அதிக விரயங்கள் இப்படி இந்த செவ்வாய் பெயர்ச்சியில் 07/05/2019 முதல் 24/06/2019 வரை கவனம் கவனம்.

விருச்சிக இராசிவிருச்சிக இராசிக்கு 6-க்குரியவன் மற்றும் ஜென்மாதிபதி செவ்வாய், எட்டில் இருப்பது விசேஷம் இல்லை. தன, குடும்ப ஸ்தானம், இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால், குடும்பத்தில் சிறு,சிறு பிரச்னை உருவாகும். வாக்கு ஸ்தானத்தை பார்வை செய்வதாலும், வாக்கில் சனி இருப்பதாலும், நமக்கு எதிரி நாமே அதாவது நம் பேச்சுதான் பிரச்னைக்குள் இழுத்துவிடும். கண், வாய் சம்பந்தமாக சிறு,சிறு பாதிப்பு தரலாம். பாத சனியாகவும் இருந்து செவ்வாய் பார்வை பெற்றதால், அவசரமாக ஓடுவதும் நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். வீண் செலவைத் தவிர்க்க வேண்டும், 07/05/2019 முதல் 24/06/2019 வரை அதிக கவனம் தேவை.

மகர இராசி: மகர இராசிக்கு 6-ல் செவ்வாய் இராகுவுடன் சேர்ந்துள்ளதாலும், விரயச் சனி பார்வை பெற்றாலும், வீண் விரயங்கள் அதிகரிக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். உடலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடன் பிரச்னை தலைவிரித்தாடும். கேஸ் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே பழைய உணவையும் ஒவ்வாத உணவையும் தவிர்த்து விடுங்கள். மனைவிக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். சொத்து விஷயத்தில் வில்லங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து தகராறு வரவும் வாய்ப்புண்டு. 07/05/2019 முதல் 24/06/2019 வரை உஷார் தேவை.


மீன இராசி: மீன இராசிக்கு சுக ஸ்தானத்தில் அதாவது 4-ம் இடத்தில் இராகுவுடன் சேர்ந்து, 12-க்குரிய சனி பார்வை பெறுவதால், வாகனம் ஓட்டுவதில் மிகுந்த நிதானம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. படிப்பில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. அயல்நாட்டில் வேலை செய்பவர்களுக்கு சந்தோஷம் இருக்காது. 12-க்குரிய சனி, சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வைக்கும்.

வியபார விஷயத்தில், கூட்டாளி விஷயத்தில் பிரச்னை உருவாக்கும். குடும்பாதிபதி இராகுவுடன் சேர்ந்து, சனி பார்வை பெற்றதால், வழக்கு இருந்தால் வெற்றி பெறுவது சிரமம். சுகஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், சிலருக்கு அறுவை சிகிச்சை ஏற்பட வாய்ப்புண்டு. 07/05/2019 முதல் 24/06/2019 வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


Bhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

©bhakthiplanet.com  All Rights Reserved