Wednesday, April 5, 2017

ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !



Written by
Sri Durga Devi upasakar,
Krishnarau.V.G

எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ?

14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்களுக்கு சிறு, சிறு பிரச்னைகள் எழும். சிலர் சொந்த நாட்டுக்கு திரும்புவர். தெய்வீக பூஜைகள், வழிபாடுகள் அதிகரிக்கும். ஷேர் மார்கெட் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வீடு, மனை விலை உயரும். இரும்பு, மணல் விலையும் உயரும். ஜவுளி வியபாரம் பிரமாதமாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT companies) சற்று மந்தம் அடையும். பொதுவாக இவ்வாண்டில் லக்கினத்திற்கு 8-ம் இடத்தில் இராகு இருப்பதால் வாகன விபத்துக்கள், இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கச் செய்யும். 2-ம் இடத்தில் கேது இருப்பதால், தெய்வ வழிபாடு மிக, மிக அவசியம். ஸ்ரீதுர்காதேவி அருளால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ பிராத்தனை செய்வோம்.

சரி, இப்போது ஒவ்வொரு இராசியினருக்கும் ஹேவிளிம்பி புத்தாண்டு பலன் எப்படி இருக்கும் என பார்ப்போம் வாருங்கள்
மேஷ இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு அதாவது ஜென்மத்தில் சூரியன், புதன் இணைந்து தனயோகத்தை எதிர்பாராமல் வாரி வழங்க உள்ளார். தனஸ்தானத்தில் செவ்வாயை குரு பார்வை செய்வதும் தனயோகமே. பூர்வீக சொத்தில் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிவுக்கு வரும். பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், திருமணம் நடக்கும். மேஷ இராசியில் பிறந்த உங்களுக்கு சுபகாரியங்கள் அதாவது திருமணம், குழந்தைபேறு உண்டாகும். 12-ம் இடத்தில் சுக்கிரன் உள்ளதால், வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. அகலகால் வைக்க வேண்டாம். நிதானம் தேவை. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு குடும்ப வாழ்க்கை தரும் ஆண்டாக அமையும்.
ரிஷப இராசி அன்பர்களே உங்கள் இராசியில் செவ்வாய் அமர்ந்துள்ளார். திட்டங்கள் நிறைவேறும். அது எப்படி என்று பார்த்தால், செவ்வாயை பாக்கியாதிபதி குரு பார்வை செய்வதால், எண்ணங்கள் ஈடேறும். 12-ம் இடத்தில் புதன், சூரியன் அதாவது தன-சுகாதிபதி இணைந்து இருப்பதால் சுற்றுலா பயணங்கள் ஏற்படும். புதிய தொழில் துவங்க திட்டங்கள் தீட்டப்படும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். 5-க்குரிய புதன் பலம் பெறுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு திருமணம் அமையும். பொதுவாக, இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு அமர்களமாக இருக்கும்.
மிதுன இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 3-ம் இடத்தில் இராகு அமைந்து, கடல் கடந்து செல்லும் பாக்கியம் தருகிறார். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு கேது பகவானால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு, சிறு மனகசப்பு ஏற்பட்டு பிறகு சமாதானம் ஏற்படும். இதற்கு நீங்களே காரணம். 12-ம் இடத்தில் செவ்வாய் அமைந்து அப்படி பேச வைக்கும். பொறுமை தேவை. பெண்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு மனைவியால், தாயாரால் பெருத்த நன்மை ஏற்படும். இடப்பெயர்ச்சி இருக்கும். வாகனம், வீடு அமையும். கடன் விஷயத்தில் கவனமாக இருங்கள். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். புதிய நண்பர்களுடன் கூட்டு தொழில் செய்வதை தவிர்க்கவும். கல்வி தடை நீங்கும். முக்கியமாக வாகன விஷயத்தில் நிதானம் தேவை. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு, குடும்பத்தினரால் மகிழ்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும்.
கடக இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தில் புதன், சூரியன் அமைந்ததால் தொட்டது துலங்கும். கவலைகள், கடன்கள் எல்லாம் காற்றில் பறந்து போகும். பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். கடக இராசியில் பிறந்த சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டவரால் பெரும் நன்மைகள் ஏற்படும். தொழில்துறை சிறப்பாக இருக்கும். சில நேரங்களில், வாழ்க்கையின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பயம் இனி இருக்காது. ஆம். தேவையில்லா சிந்தனை செய்பவர் நீங்கள். உங்களை விட உங்களை சார்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளவர். பாக்கிய சுக்கிரன், உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் மகிழ்ச்சி பொங்க வைக்க போகிறார். இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு அருமையான ஆண்டு.
சிம்ம இராசி அன்பர்களே உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன் இணைந்து, புஷ்கல யோகத்தை கொடுப்பதால், நல்ல தனலாபம் உண்டு. திட்டங்கள் வெற்றி பெறும். 7-ம் இடத்தில் கேது இருப்பதால், கூட்டாளியின் சதி திட்டங்களை முறியடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். பொதுவாக, உங்களை வீழ்த்த நினைத்தவர்கள், உங்கள் முன் விழுந்து விடுவார்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். ஜென்மத்தில் இராகு இருப்பதால், கோபம் அடைய செய்யும். தன குரு காரிய சாதனை செய்ய வைக்கும். சத்ரு ஜெயம் தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கொடுக்கும். 10-ல் செவ்வாய் உள்ளார். அரசாங்க ஆதயம் கிடைக்கும். இருப்பினும், ஜாமீன் கையெழுத்து போட வேண்டும். உடல்நலனிலும் கவனம் தேவை. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு பூத்து குலுங்கும்.
கன்னி இராசி அன்பர்களே ஜென்ம குரு உங்களை பல வழிகளில் காக்கும். அஷ்டமத்தில் புதன், சூரியன் இணைந்துள்ளதால் கடன் பட்டாவது வீடு, மனை வாங்கி விடுவீர்கள். சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படும். சொத்து விஷயங்களில் பிரச்னை வரலாம். குடும்பத்தில் தடைப்பட்ட சில நற்காரியங்கள் நடந்து விடும். கல்வி தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடன் கட்ட கடன் வாங்க வேண்டியதாக இருக்கும். காரணம், பாக்கியத்தில் செவ்வாய் இருப்பதால் வீடு, மனை, கடன் வாங்க செய்யும். இதுவரை வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சிலருக்கு வேலை வாய்ப்பு வரும். தொழில் தொடங்க நினைப்பவர்கள், படிப்படியாக முதலீடு செய்ய வேண்டுமே தவிர பெரிய அளவில் முதலீடு கூடாது. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு வளர்ச்சி கொடுக்கும் ஆண்டு.
துலா இராசி அன்பர்களே முன்னேற முடியவில்லையே என்று ஏங்கிய நீங்கள், இனி பல காரியங்களை சாதிக்க போகிறீர்கள். திருமணம் நடைப்பெறும் காலம் இது. சிலருக்கு கேதுவால் காதல் தோல்வி கொடுக்கும். ஆகவே உஷாராக இருக்கவும். உத்தியோகத்தில் இடமாற்றம் அமையும். முக்கிய பொறுப்பு பலருக்கு கிடைக்கும். புதிய நண்பர்களால் லாபம் உண்டு. கேளிக்கை, விருந்து அதிகரிக்கும். அயல்நாட்டில் இருக்கும் சிலர் தாயகம் திரும்ப வேண்டி வரும். சொத்துக்கள் வாங்க வசதி ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு இருக்கும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். தேவையில்லா வாக்கு வாதம் ஏற்படும். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் அமைய வாய்ப்புண்டு. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அருமைபெருமை தரும் ஆண்டு.
விருச்சிக இராசி அன்பர்களே உங்கள் திட்டங்கள் கை கொடுக்கும் கவலை இல்லை. ஆனால் உங்கள் திட்டங்கள் நிறைவேறக் கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். கணவனால் நற்காரியம் நடைப்பெறும். 7-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் நல்லவற்றை தருவார். 6-ம் இடத்தில் சூரியன், புதன் இருப்பதும் நன்மையே. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு புத்திர பிராப்தி கொடுக்கும். சுகஸ்தானத்தில் கேது உள்ளதால், உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வாக்கு ஸ்தானத்தை செவ்வாய் பார்வை செய்கிறார். உங்கள் வார்த்தைகளால் நல்லவை நழுவி விடுகிறது. அதனால் பேச்சில் பொறுமை தேவை. லாபத்தில் குரு பகவான் அமைந்து தனவரவு தருவார். பணத்திற்கு பஞ்சம் இல்லை. 9-ம் இடத்திற்கு 2-ல் இராகு உள்ளதால் பெற்றோர் உடல்நலனில் அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். பஞ்சமத்தில் சுக்கிரன் இருப்பதால் தொழில் பிரமாதமாக இருக்கும். இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமர்க்களமான ஆண்டு.
தனுசு இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 9,10-க்குரியவர்கள் இணைந்து, பஞ்சமத்தில் இருப்பதால், தர்ம-கர்மாதிபதி யோகம் பெறுகிறீர்கள். சொந்த வீடு, நிலம் வாங்கும் அமைப்பு ஏற்படும். சுகஸ்தானத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் உள்ளதால், தாயாருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும், இனி உடல்நலம் பெறுவார். வாகன விருத்தி உண்டாகும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். வழக்கு விஷயத்தில் சற்று குழப்பம் ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் எழும். சகோதரவர்கத்தில் நன்மைகள் ஏற்படும். பொதுவாக, இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு பூத்து குலுங்கும்.
மகர இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு சுகஸ்தானம், பஞ்சமஸ்தானம் அருமையாக அமைந்துவிட்டது. தொட்டது பொன்னாகும். அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும். பாக்கியஸ்தான குரு திருமணம், சுப செலவுகள் ஏற்படுத்தும். சிலருக்கு கொடுத்த கடன்கள் வசூலாகும். தடைப்பட்ட கல்வி தொடரும். நண்பர்கள் விஷயத்திலும், வாகனம் ஓட்டும்போதும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னை எழும். தேவையில்லா பேச்சு வேண்டாம். உடல்நலனில் அக்கரை செலுத்துங்கள். புனிதஸ்தல பயணங்கள் கிட்டும். வியபாரம் வளர்ச்சி பெறும். நலிந்த தொழில் புத்துணர்ச்சி பெறும். மனைவி வழியில் நன்மை கிடைக்கும். பொதுவாக, இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு வளர்ச்சியான ஆண்டாக இருக்கும்.
கும்ப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதால் பணத்திற்கு பஞ்சம் இல்லை. எண்ணும் எண்ணங்கள் ஈடேறும். பழைய வீட்டை புதுபித்தல், வாகனத்தை மாற்றுதல் போன்றவை அமையும். கீர்த்தி ஸ்தானத்தில் புதன், சூரியன் இணைந்து காரிய சித்தி கொடுத்தாலும, அஷ்டம குரு உள்ளதால் சில விஷயங்களில் கவனமும் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வெளிநாட்டில் வேலை செய்யும் சில கும்ப இராசியினர், தாயகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு இடப்பெயர்ச்சி தரும். சப்தம இராகு இருப்பதால், சிந்தனைகள் அதிகரிக்கும். மனகுழப்பம் தரும். ஆகவே அவ்வப்போது தெய்வ தரிசனம் செய்து வர வேண்டும். தாய்தந்தையால் நன்மை ஏற்படும். பொதுவாக, இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு பொலிவான ஆண்டாக அமையும்.
மீன இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் புதன், சூரியன் இணைந்துள்ளார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஜென்ம சுக்கிரன் இருப்பதால், பெண்களால் ஆதாயம் உண்டு. சத்ரு ஸ்தானத்தில் இராகு அமைந்துள்ளார். இதனால், மற்றவர்கள் பேச்சை கேட்டு நடந்துக்கொண்டால், தேவையற்ற பிரச்னைகள் வரும். சிலருக்கு கோர்ட் வழக்கு வரலம். ஆகவே உஷார் தேவை. 12-ம் இடத்தில் கேது உள்ளதால், தேவையில்லா மனக்குழப்பம் ஏற்படும். பொதுவாக, பணத்திற்கோ, சொத்து சுகத்திற்கோ சுக்கிரன் கெடுதல் செய்ய மாட்டார். அதனால் பண வரவு உண்டு. தெய்வ அருளால் பல நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாரா அதிர்ஷ்டங்கள் உண்டு. இந்த ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு இன்பமான இனிய ஆண்டாக அமையும்.

அனைவருக்கும் சித்திரை ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய -மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved