Wednesday, October 26, 2016

தோஷம் தடுக்கும் மரங்கள்




வீட்டில் மரங்கள் அதிகமாக வளர்த்தால் அந்த வீட்டிற்கு தோஷங்கள் அண்டாது. மரத்தில் சித்தர்கள் தவம் செய்வதாக ஐதிகம். ஆனால் இலவ மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது.

கிளி இலவ மரத்தில் இருக்கும் காய் கனியும் வரை காத்து இருக்கும். அந்தக் காய் கனியாமல் வெடித்து பஞ்சாகும். அதை சற்றும் எதிர்பார்க்காத கிளி, ஏமாற்றத்துடன் சபித்துவிட்டுச் செல்லும். இப்படிக் காய் காய்க்கும் போதெல்லாம் காத்திருந்து ஏமாற்றம் அடையுமாம் கிளி. கிளியின் சாபத்தால் அந்த இல்லத்தில் சந்தோஷம் இருக்காது. வறுமை வாட்டும் அதே போல்தான் கருவேப்பிலைச் செடியும்.

கருவேப்பிலைச் செடியை இல்லத்தில் வைத்தால் மகா லஷ்மி இல்லத்தில் இருந்து அழுது கொண்டே செல்வாளாம். மாப்பிளையான விஷ்ணுவுக்கு கருவேப்பிலைச் செடியை சீதனமாக கொடுக்கமறந்தார் லஷ்மிதேவியின் தந்தை.

சீர்வரிசையை நீங்கள் தடபுடலாகச் செய்தாலும் சாதாரண கருவேப்பிலைச் செடியை உங்களால் தர முடியவில்லை பார்த்தீர்களா?“ என்று பகவான் சிரித்துக் கொண்டே கேட்டார். அந்த வார்த்தையைக் கேட்ட லஷ்மி தேவி கோபம் கொண்டு, கதிரவன் மேற்கில் சாயும் முன் நான் கருவேப்பிலைச் செடியுடன் வருகிறேன் என்றாள்.

கருவேப்பிலைச் செடியை தன் தந்தையிடமிருந்து வாங்கி, தன் கணவனின் ஊருக்குச் செல்லும் வழியில், சூரியன் மறைந்து விட்டது. அதனால் கவலையில் கருவேப்பிலைச் செடியிலேயே மகாலஷ்மி அழுது கொண்டே அமர்ந்தாள். கருவேப்பிலையைச் செடியைப் பார்த்தால் மகாலஷ்மி கோபம் கொள்வார்.

முருங்கை மரம், முனீஸ்வரர் இருக்கும் இடம் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. எனவே முருங்கை மரம் வாசலுக்கு நேராக இருக்கக் கூடாது.

அசோக மரம், வேப்ப மரம், தென்னை மரம் போன்ற மரங்களை வீட்டில் வளர்க்கலாம்.

வீட்டில் எவ்வளவு செடிகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி இருக்கும். அதனால்தான் மன்னர்களும் முனிவர்களும் தவம் புரிய காடுகளுக்னுகுச் சென்றார்கள்.

மரங்களும் செடிகளும் தோஷத்தை அண்டவிடாமல் தடுக்கும். மரத்திற்கும் செடிகளுக்கும் ஒரு வாசனை இருக்கும். அந்த வாசனையை உணர வேண்டும் என்றால் அதிகாலையில் மரத்தின் அருகில் இருந்தால் தெரியும். அந்த வாசனையே வீட்டில் இருக்கும் தோஷத்தையும் விரட்டியடிக்கும். சாம்பிராணிப் புகைக்கு இருக்கும் சக்தி பச்சிலை வாசத்திற்கும் இருக்கிறது.

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 







For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2016 bhakthiplanet.com  All Rights Reserved