Sunday, August 30, 2015

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள். கண்ணப்ப நாயனார் வரலாறு!



Written by Niranjana
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 17
முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம்

திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை காத்தான் திண்ணன்.

உலகத்தையே காக்கும் சிவன். ஆனால் திண்ணனை பொறுத்தவரை எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனை திண்ணன்தான் பத்திரமாக காக்கிறான். ஒரு சிறு எறும்பு கூட சிவலிங்கத்தின் அருகில் செல்லாதவாறு காத்து வந்தான்.

ஸ்ரீராமர் காட்டில் இருக்கும் போது, ஒரு விநாடி கூட உறங்காமல் லட்சுமணன் கண்ணும் கருத்துமாக துணை இருந்ததை போலவே இருந்தான் திண்ணன்.
பொழுது விடிந்தது. தனக்காகவும் தன் குஞ்சுகளுக்காகவும் பறவைகள் உணவுக்காக தமது கூடுகளை விட்டு பறந்தது. ஆனால் திண்ணனோ தனக்காக இல்லாமல் குடுமி சாமிக்காக வேட்டைக்கு சென்றான்.

அத்திருகாளாத்தியின் பக்கத்திலுள்ள காட்டில் வேட்டைக்கு சென்றான். அங்கேமேலும் படிக்க