Tuesday, August 19, 2014

சனிஸ்வர பகவானை வணங்கினால் ஓடும் தீவினை



Written by Niranjana

நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது.

கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். அத்துடன் இந்த நாட்களில் மனநல பாதிப்படைந்தவர்களையும், உடல்நலம் சரியில்லாதவர்களையும் மேலும் சற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று விஞ்ஞான மருத்துவம் ஒப்புக்கொள்கிறது. இது, கிரகங்களால் மனிதனுக்கு தாக்கம் இருக்கிறது என்கிற மெய்ஞான கருத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதே உண்மையாகும்.

சனிகிரகமானது, கலிலியோ கலிலி டெலஸ்கோப் மூலம் பார்த்ததில், “ராட்சஸ காதுகள் முளைத்தது போல் ஒரு கிரகம்” இருக்கிறது என்றார். சனிகிரகம் என்று பெயர் வைப்பதற்கு முன்பு, இக்கிரகத்தை “பேய்கிரகம்“ என்று கூட மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் அழைத்தார்கள். அத்துடன் சனியை வாயு கிரகம் என்றுக்கூட சொல்கிறது விஞ்ஞானம்.

நாசா விஞ்ஞானிகள் பல செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அதுபோன்ற ஒரு நாசாவின் செயற்கை கோள், “திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர்” கோவிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியை கடக்கும் போது, மூன்று வினாடிகள் ஸ்தம்பித்துவிட்டு திணறி, அந்த மூன்று வினாடிகளுக்கு பிறகு மீண்டும் தன் வழக்கமான செயல்பாட்டை செய்கிறது. இருந்தாலும் செயற்கை கோளுக்கு எந்தவித பழுதும் ஏற்படுவதில்லை. அதை அறிந்த விஞ்ஞானிகள், எதனால் இதுபோல் சம்பவம் நடக்கிறது? என்று ஆராய்ந்தபோது,

சனிகிரகத்தில் இருந்து, கண்களுக்கு தெரியாத “கருநீலக்கதிர்கள்” திருநள்ளாறு கோவில் மீது விழுகிறது. அதுவும் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் சனிபெயர்ச்சியன்று, கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள்வரை அதிகமாக இருக்கிறது. மனிதனுக்கு அப்பாற்பட்ட – மனித சக்தி மிஞ்சிய ஒரு சக்தி உண்டு என்பதை உணர்ந்து, திருநள்ளாறு வந்த நாசா விஞ்ஞானிகள், சனி பகவானை வணங்கினார்கள்.
எல்லா கிரகங்களுக்கும் சக்தி இருக்கிறது. அதுவும் சனிபகவானுக்கு அதிகமாகவே ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், “சனியை போல் கொடுப்பார் இல்லை, சனியை போல் கெடுப்பார் இல்லை” என்றார்கள் நம் இந்தியதிருநாட்டின் மெய்ஞானிகள்.

ஒரு சூரியன் ஆயிரம்கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனிபகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார் மகராஷ்டரா மாநிலத்தில்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிங்கனாப்பூர் என்கிற ஊர் இருக்கிறது. இது, ஷீரடியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள சனிபகவானை…மேலும்படிக்க

சனிஸ்வரபகவானைவணங்கினால்ஓடும்தீவினை