நல்ல
வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக
இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக்
கூடாது என்பது சாஸ்திர விதிமுறை.
இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய
நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில்
சாப்பிடும் போது, உணவில் ஏதேனும்
பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில
சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம்.
ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது
என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய
காரணம் என்றாலும், சாஸ்திரம் சொல்கிற சில விஷயங்களையும்
தெரிந்துக் கொள்வோம்.
ஒரு
தாய் தன் மகனுக்கு உணவு
பரிமாறினாள். மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் விளக்கு அணைந்துவிட்டது. இதை
கண்ட அவன் தாயார், “இரு.
சாப்பிடாதே. விளக்கு ஏற்றி வைக்கிறேன்.
பிறகு சாப்பிடு” என்று சொல்லி ஒரு
தீபததை ஏற்றி வைத்தாள்.
இதை
கண்ட மகன், “ஏன் தீபம்
ஏற்றி சாப்பிட வேண்டும்.? மகாபாரதத்தில்
பீமன் சிறுவனாக இருந்த பருவத்தில், ஒருநாள்
உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தபோது, தீபம்
அணைந்தது விட்டது…மேலும் படிக்க