Written by Niranjana
சூரியன்,
சந்திரன், அக்னி இவை மூன்று
சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது
அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச
மரமாக தோன்றியது.
சிப்பிக்குள்
முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து
முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின்
கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை.
ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து
காப்பதால் இறைவனை நினைத்து நம்
கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான்.
துன்பம் தூர ஒடி விடும்.
ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக
இருப்பவர்களின் அருகில் எந்த தீய
சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள்
விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு
துஷ்ட சக்திகள் விலகுகிறது.
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
பெண்கள்
ருத்ராட்சம் அணியலாமா? என்று சிலருக்கு சந்தேகம்
இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாம்
என்கிறது புராணம். ஆனால் சில நாட்களில் மட்டும் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை
தவிர்க்க வேண்டும்.
ருத்ராட்சம்
அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த
முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்? என்பதை
பார்க்கலாம்…மேலும் படிக்க