எடுத்து
வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் இந்த வார்த்தை பொருந்தும்.
ஒருசமயம் பார்வதிதேவியும், சிவபெருமானும் பூலோகத்திற்கு வந்தார்கள். பல இடங்களை சுற்றிபார்த்துகொண்டே
வரும் போது, இமயமலை பகுதிக்கு
வந்தார்கள். அந்த இடத்தை கண்ட
சக்திதேவி ஆச்சரியப்பட்டாள்.
“இமயமலையின்
இந்த பகுதி மிகவும் ரம்யமாக
இருக்கிறது. இங்கே நமக்கென ஒரு
அரண்மனையை உருவாக்கி அந்த அரண்மனையில் நிரந்தரமாக
வசிக்க வேண்டும்” என்றாள்.
அதற்கு
இறைவன், “உன் ஆசையில் ஒன்றும்
தவறில்லை. ஆனால் விரும்புகிற இடத்திலெல்லாம்
நாம் அரண்மனை கட்டி வாழ
வேண்டும் என்று எண்ணுவது சரியில்லை.”
என்றார் சிவபெருமான்.
“நான்
பர்வதராஜ புத்திரி. ராஜவம்சத்தில் பிறந்தவள். நான் நினைத்தால் இந்த
பூலோகம் முழுவதையும் என் அரண்மனையாக மாற்றிவிடுவேன்.
அப்படி இருக்கும்போது இந்த இடத்தில் ஒரு
அரண்மனையை உருவாக்க என்னால் இயலாதா?” என்று
கோபம் அடைந்தாள் பராசக்தி.