Sunday, July 27, 2014

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?



நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், சாஸ்திரம் சொல்கிற சில விஷயங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

ஒரு தாய் தன் மகனுக்கு உணவு பரிமாறினாள். மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் விளக்கு அணைந்துவிட்டது. இதை கண்ட அவன் தாயார், “இரு. சாப்பிடாதே. விளக்கு ஏற்றி வைக்கிறேன். பிறகு சாப்பிடுஎன்று சொல்லி ஒரு தீபததை ஏற்றி வைத்தாள்.

இதை கண்ட மகன், “ஏன் தீபம் ஏற்றி சாப்பிட வேண்டும்.? மகாபாரதத்தில் பீமன் சிறுவனாக இருந்த பருவத்தில், ஒருநாள் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தபோது, தீபம் அணைந்தது விட்டதுமேலும் படிக்க

ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை



ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும்.

ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதேஎன்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை உச்சரித்தால், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்கிறது சாஸ்திரம். அதுபோல்தான், ஒசைக்கு சக்தி இருக்கிறது என்பதை பல இதிகாசங்களிலும், புராணங்களிலும் உறுதியாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்மேலும் படிக்க

ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை 

ருத்ராட்சம் – முகங்களும் – சிறப்புகளும்


Written by Niranjana
சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது.

சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும். ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள் விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? 
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாம் என்கிறது புராணம். ஆனால் சில நாட்களில் மட்டும் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

ருத்ராட்சம் அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்? என்பதை பார்க்கலாம்மேலும் படிக்க

வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு! சிறப்பு கட்டுரை



எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை  மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.

குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது?  
ஒருவேலை தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால்மேலும் படிக்க