Tuesday, October 20, 2015

தூங்கும்போது உடலைவிட்டு வெளியே உலவும் ஆத்மா

Written by Niranjana
விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம்.

கனவு  எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அந்த நபரின் உடலை விட்டு ஆத்மா,  வெளி உலகத்திற்கு உலவ செல்கிறது.

என் கனவில் என் தந்தையின் ஆத்மாவிடம் பேசி விலை உயர்ந்த ஒரு பொக்கிஷத்தை எடுத்தேன். அதனால் அதை ஒரு சாதாரண கனவு என சொல்லமாட்டேன்என்றார் பிரபல எழுத்தாளர் தந்தோ என்பவரின் மகன்

எழுத்தாளர்  தந்தோ 1321-ல் காலமானார். அவர் எழுதிய டிவைன் காமெடி நூலின் கையெழுத்துப் பிரதியின் பெரும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தோவின் மகன் ஜாகப்போ, அதனை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவி்லலை.

ஒருநாள் ஜாகப்போ ஒரு கனவு கண்டார். அதில், வெள்ளை  ஒளிமயமாகத் தந்தோ தோன்றினார். அவரிடம் கையெழுத்துப் பிரதியைப் பற்றி  ஜாகப்போ கேட்கிறார். “தனது பழைய அறையில் ரகசியமான இடத்தில் வைத்து இருக்கிறேன்.” என்று கூறி அந்த இடத்தை பற்றியும் தெளிவாக தந்தோ தன் மகனிடம் கூறினாராம்.

கனவு கலைந்து ஜாகப்போ கண் விழித்தார். தன் தந்தையிடம் பேசியது வெறும் கனவா அல்லது நிஜமா என்ற யூகிக்க முடியாமல் இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் தன் வழக்கறிஞர் நண்பரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, தந்தை குறிப்பிட்ட அறைக்கு சென்ற ஜாகப்போ, அவர் குறிப்பிட்ட இடத்தின் சுவரில் பலகை பதிக்கப்பட்டிருப்பதை கண்டார்.

அதை அகற்றிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே டிவைன் காமெடி கையெழுத்து பிரதி கிடைத்தது.

இப்படி கனவு சில  நேரத்தில் உண்மையாக அமைந்துவிடுகிறது. எதனால் என்றால் நம் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வெளியுலகத்தை சுற்றி பார்க்க புறப்படும். என்கிறது சாஸ்திரம். அதனால்தான் ஒருவர் தூங்கும்போது தட்டி எழுப்பக் கூடாது.

அப்படி நல்ல தூக்கத்தில் இருப்பவர்களை திடீரென தட்டி எழுப்பும் போது, அந்த சமயத்தில் உடலைவிட்டு வெளியுலகத்தில் உலவ சென்ற ஆத்மா லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் தூக்கத்தில் இருப்பவர்களின் உடலுக்குள் வந்தடையும் என்கிறது ஆத்ம சாஸ்திரம்.

தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பக் கூடாது என்கிறது மருத்துவமும். தூக்கத்தில் இருப்பவரை இப்படி தினமும் தட்டி எழுப்பினால் அந்த நபரக்கு மனநிலை பாதிப்பும் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நல்ல

இதற்கு நம் இந்து சமய புராணம் என்ன சொல்கிறது?

மகாபாரதத்தில் குருஷேத்திர போருக்கு தர்மர், கிருஷ்ணரின் ஆதரவு வேண்டி சென்றார். அப்போது கிருஷ்ணபரமாத்மா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் தர்மர், கிருஷ்ணரின் கால்பகுதியின் அருகே சத்தமில்லாமல் நிதானமாக அமர்ந்தார்.

பிறகு கிருஷ்ணபரமாத்மா கண்விழித்தபோது தர்மரை பார்த்து, “எப்போது வந்தாய்.? ஏன் என்னை எழுப்பவில்லை.?“ என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

அதற்கு தர்மர், “ஆத்மாவை ஏன் அவசரப்படுத்த வேண்டும். நிதானமாகத்தான் வரட்டுமே.” என்றார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர்
இன்னொரு சம்பவம் இருக்கிறது.  

ஒருநாள் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது ஒரு பக்தர், “சுவாமி எங்கள் இல்லத்தில் நாங்கள் ஒரு பூஜை செய்கிறோம். அந்த பூஜையில் நீங்கள் வந்து கலந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.” என்றார். சுவாமிஜியும், “நிச்சயம் வருகிறேன்என்றார்.

அந்த பக்தர் சொன்ன தேதியில் சுவாமியின் உடல்நிலை மேலும் சரியில்லாமல் இருந்தது. அதனால் அன்று ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை.

மறுநாள் அந்த பக்தர் சுவாமியை தரிசிக்க வந்தார்.

சுவாமி உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் நீங்கள் என் வீட்டு பூஜைக்கு வருவீர்கள் என உறுதியாக நம்பினேன். அதன்படி வந்து கலந்துக்கொண்டீர்கள். மிகவும் நன்றி.” என்று சொல்லி ஆசி பெற்று சென்றார் பக்தர்.

அதை கேட்ட பரமஹம்ஸரின் உடன் இருந்தவர்கள், “சுவாமி.. நேற்று உங்கள் உடல்நிலை சரியில்லாததால் உங்கள் அறையில்தான் ஓய்வில் இருந்தீர்கள். ஆனால் இவரோ, அவரின் வீட்டுக்கு நீங்கள் வந்ததாக சொல்கிறாரே.?” என்று கேட்டனர்.

அதற்கு ஸ்ரீஇராமகிருஷ்ணர் பரமஹம்ஸர் சொன்னார், “என் உடல்நலம்தான் சரியில்லை, ஆனால் என் ஆத்மா ஆரோக்கியமாகதானே இருக்கிறது.”

சில நேரங்களில் ஒருவேலை செய்யும்போது, கவனம் மட்டும் வேறு எதிலோ இருப்பதைபோல, எந்த ஆத்ம சக்தி உடலை இயங்க வைக்கிறதோ, அதே ஆத்ம சக்தி உடலை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி உடலை இயங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதுவே விதிவசத்தால் திரும்ப உடலுக்குள் நுழைய முடியாதபோது, உடல், அழிய காரணமாகிறது.


அதனால்தான் பெரியவர்க்ள சொல்வார்கள். குழந்தை நன்றாக தூங்கும்போது, குழந்தையின் முகத்திற்கு பவுடர் பூசுவது அல்லது ஒப்பனை செய்வது போன்ற செயல்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால், வெளியேறி சென்றிருந்த  ஆத்மா திரும்ப வரும்போது, முகம் மாறியிருக்கிறதே,? தமது உடல் எது என்று அறிய முடியாமல் குழப்பம் அடையும் என்பார்கள்.!

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 








                        © 2015www.bhakthiplanet.com All Rights Reserved