Written by
Niranjana

அதுபோல,
நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், அந்தந்த
கிரகங்களை வழிபட வேண்டும் என்பது
கட்டாயம். ஆனாலும், இறைவனையும் வணங்க வேண்டும் என்பதும்
அவசியம்.
உதாரணத்திற்கு
ஒரு சம்பவத்தை சொல்லலாம்.

தனால்
மதுரை மாநகருக்கு புறப்பட தீர்மானித்தார் ஞானசம்பந்தர்.
ஆனால் திருநாவுக்கரசரோ, ஞானசம்பந்த பெருமானுக்கு சமணர்களால் தீங்கு ஏற்படுமோ என
அஞ்சினார். “இன்று நாளும் கோளும்
சரியாக இல்லை. எனவே தாங்கள்
இன்று மதுரைக்கு போக வேண்டாம்.” எனக்
கேட்டுக்கொண்டார். ஆனால், சம்பந்தரோ, “ஐயா,
இறைவனின் அடியார்களை நாளும் – கோலும் ஒரு நாளும்
பாதிக்காது.” என்று கூறி,
“வேயுறு
தோளி பங்கன் விடம் உண்ட
கண்டன்..”
என்கிற
பதிகத்தை பாடினார்.

நவராத்திரி
திருநாட்களில் எந்தெந்த நவதானியம் வைத்து வழிபட வேண்டும்?,
இதனால் எந்தந்த கிரகங்கள் மகிழ்ச்சி
அடைகிறது?, அதனால் என்ன நல்ல
பலன் கிடைக்கும்? என்பதை பற்றி அறிந்து,
நவகிரகதோஷத்தில் இருந்து விடுப்படுவோமா?.
சூரியன்
சூரிய
பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால்
தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ
படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும்
பாதிப்புகள் விலகும். அரசாங்க தொல்லை தீரும்.
கண்பார்வை வலு பெறும். அரசாங்க
ஆதரவும் கிடைக்கும்.
சந்திரன்
சந்திர
பகவானுக்கு உரியது நெல். அதனால்,
அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால்,
சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள்
முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். தேய்பிறையாக
இல்லாமல், வாழ்க்கை வளர்பிறையாக பிரகாசிக்கும்.
செவ்வாய்
செவ்வாய்
பகவானுக்கு உரியது துவாரை. இதனை
படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும்.
சொத்து சேரும்.
புதன்
புதனுக்குரியது
பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து
வணங்கினால், கல்வி தடை நீங்கும்.
பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில்
வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ்
பெறலாம்.
குரு
குரு
பகவானுக்கு உரியது கடலை. கடலையை
படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக
நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் விரையில் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தங்க நகை வியபாரத்தில் ஜொலிக்கலாம்.
சுக்கிரன்
சுக்கிர
பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை
படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். கலைதுறையில் சாதிப்பார்கள். பணவரவு சுலபமாக அமையும்.
திருமண பாக்கியம் அமையும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சனி
சனி
பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து
வணங்கினால், எந்த தடையும் நீங்கும்.
தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள்
நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும்.
இரும்பு வியபாரம், கனரக தொழில்சாலை, எண்ணெய்
வியபாரத்தில் அடுத்த தலைமுறைக்கும் சொத்து
சேர்க்கலாம். நோய் தீரும். ஆயுள்
அதிகமாகும்.
இராகு
இராகு
பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து
படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை
அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும்.
திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு
உண்டு. கேளிக்கைகளில் பொருள் சேரும். சொகுசான
வாழ்க்கை அமையும். வெளிநாடு தொடர்புகளால் முன்னேற்றம் தரும்.
கேது
கேது
பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து
வணங்கினால், வாட்டி வதைத்த நோய்
தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும்.
மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி
பிறக்கும். கல்வி ஞானம் அதிகரிக்கும்.
பெயர்-புகழ் கிடைக்கும். வெளிநாடு
பயணங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில்
உயர் அந்தஸ்து கிடைக்கும். திருமண தடையும், புத்திர
பாக்கிய தடையும் நீக்கும். கௌரவமான
வாழ்க்கை தரும்.
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com