பூமாதேவியின் மகனான நரகாசுரன்,
மக்களுக்கும், தேவர்களுக்கும், பெரும் தொல்லை
தந்து வந்தான்.
இதனால் அவன்
தரும் இன்னல்களில் இருந்து விடுபட
ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினார்கள் தேவர்கள். இதனால்
நரகாசுரனை வதம்
செய்தார் பகவான்.
நரகாசுரன் மரணம்
அடையும் சமயத்தில், “எனது
புகழ்
அழிந்துவிடக் கூடாது,
அதனால்
என்
மரணத்தையும் ஒரு
திருநாளாக மக்கள்
மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.” எனக்
கேட்டுக்கொண்டான்.
அசுரனின் தொல்லையில் இருந்து விடுதலை பெற்று,
மக்கள்
நிம்மதி அடைந்த
நாள்தான் தீபாவளி திருநாள்.
ஒரு மாபெரும் அசுரனிடம் இருந்து விடுப்பட்ட பூலோக
– தேவலோகத்தினர், பிரச்சனைகள் இன்றோடு தொலையட்டும் என்ற
நோக்கத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடினர்.
நராகாசுரனின் மகன்
பகதத்தன். தனது
தந்தை
தீய
வழியில் சென்றாலும், இவன்,
பகவான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் நட்புடன் இருக்க
விரும்பினான். அதனால்
தனது
தந்தையின் நினைவு
நாளில்,
நாட்டில் அனைத்து இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி
வைத்து,
பகவான்
ஸ்ரீகிருஷ்ணருக்கு பரிசுகள் தருவதை
வழக்கமாக கடைப்பிடித்தான்.
அதனால்தான் இன்றுவரை தீப
திருநாளாக தீபாவளி நன்னாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாள் அன்று
பகவான்
ஸ்ரீகிருஷ்ணரின் அன்பும் – ஆசியும் நமக்கு
கிடைக்க வேண்டும் என்ற
எண்ணத்தில்தான், புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறிக்கொண்டு, ஒவ்வொரு இல்லந்தோறும் நிறைய
தீபங்களை ஏற்றி,
இறைவனை
வணங்கி,
ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்கும் நோக்கத்தில் தீப
திருநாளாம் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறோம்.
ஒருமுறை, தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றியவர் ஸ்ரீமகாலஷ்மி. ஸ்ரீமகாலஷ்மியை பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு, லஷ்மிதேவிக்கு மாலையிட வந்தார்.
சிறிது நேரம்
ஸ்ரீமகாவிஷ்ணுவுடன் விளையாடலாம் என்ற
எண்ணத்தில், லஷ்மிதேவி ஓடிபிடித்து விளையாடினார். அப்போது அங்கிருந்த எள்
செடியின் மீது
லஷ்மிதேவியின் பாதம்பட்டு, எள்ளில் இருந்து எண்ணெய் வெளியேறியது. இதை
கண்ட
ஸ்ரீவிஷ்ணுபகவான், “இந்த
நாளில்
நீ
நல்லெண்ணெயில் வாசம்
செய்வாயாக” என்று
உத்தரவிட்டார்.
தீபாவளி திருநாள் அன்று,
“கங்காஸ்நானம் ஆனதா”
என
கேட்பார்கள். காரணம்,
சாதாரண
நாளில்
குளியலுக்கு பயன்படுத்துகிற தண்ணீர் சாதாரண
தண்ணீராக இருக்கும். அதுவே,
தீபாவளி திருநாள் அன்று
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தண்ணீர், கங்கையாக மாறும்
என்பது
ஐதீகம்.
அதனால் தீபாவளி திருநாளாள் அன்று
நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த
தண்ணீரை கங்கை
நீராக
பாவித்து வணங்கி
ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.
தீபாவளி திருநாள் அன்று
ஸ்ரீமகாலஷ்மியை நம்
இல்லத்திற்கு அழைக்க
வேண்டும். சுத்தமும் – சுகாதாரமும் இருக்கின்ற இடத்தில்தான் ஸ்ரீலஷ்மிதேவி வாசம்
செய்வாள். அதனால்
தீபாவளி திருநாள் அன்று,
காலையில் வீட்டு
வாசல்
பெருக்கி, பசும்
சாணம்
அல்லது
பன்னீரில் மஞ்சள்
கலந்த
தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை
பூகோலம் போட வேண்டும்.
வாசற்காலுக்கு மஞ்சள்
– குங்குமம் வைக்க
வேண்டும். வாசலுக்கு மாயிலை
தோரணம்
கட்டி,
மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால்
அந்த
இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த
தீபாவளி திருநாள் அன்று
பித்ருக்கள் (முன்னோர்கள்) நம்
இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை
மலர்களையும் வைக்க
வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க
வேண்டும். தீப
திருநாள் அன்று,
பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு,
“நரக
சதுர்த்தி” என்று
பெயர்.
மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம்
ஒருமுறை, மகாபலி
சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே,
உன்
பக்தர்களின் இல்லத்தில் நீ
நிரந்தரமாக இருக்க
என்ன
செய்ய
வேண்டும். உன்
விருப்பம் என்ன?”
என்று
கேட்டார்.
அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி,
மகாபலி
சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில
பூஜை
முறைகளை பற்றிச் சொன்னார்.
ஐப்பசி மாதம்
– கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல்
அமாவாசைவரை, தீபம்
ஏற்றி
யார்
என்னை
வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு
முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி.
மகாபலி சக்கரவர்த்தியின் தயவில்
நாம்
இந்த
ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை
நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை
பெறுவோம்.
தீபாவளி திருநாள் அன்று,
மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி,
மல்லிப்பூ வைத்து,
ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை
பூ,
மல்லிகைப் பூ
வைத்து,
அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து
வணங்குவது மிக
சிறப்பு.
நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம்
என்கிறது விருக்ஷ் சாஸ்திரம்.
மாலையில் தீபம்
ஏற்றிய
பிறகு,
ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம்
– குபேர
வாசம்
என்பார்கள். அதனால்
வடக்கை
நோக்கி
குபேர
பகவானை
வணங்குங்கள்.
தீபாவளி திருநாள் அன்று,
யமதர்மராஜன் தன்
சகோதரியான யமுனைக்கு சீர்
கொண்டு
வருவார். அதனால்
அன்று
மாலை
நம்
இல்லத்தில் நிறைய
தீபம்
ஏற்றினால், தன்
பூலோக
வருகையை மக்கள்
மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால்
அந்த
இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன்
சகோதரிகள் போலவே
எனறெண்ணி, அந்த
குடும்பத்திற்கு ஆபத்து
வராமல்
பார்த்துக்கொள்வார். அந்த
ஆண்டு
முழுவதும் துஷ்ட
சம்பவங்கள் அந்த
இல்லத்தில் ஏற்படாது.
தீபதிருநாள் அன்று
கேதார
கௌரி
விரதத்தை கடைபிடிப்பார்கள்.
கேதாரேஸ்வரரை வேண்டி
கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின்
இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம்.
இதனால் கேதார
கௌரி
நோம்பை
கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலஷ்திதேவியின் ஆசியும், இன்னும் பல
தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை
வாய்ந்த அற்புத
திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த
தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் என்
இனிய
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
Astrology
Consultation
Know Your Complete Horoscope prediction
Know Your Complete Horoscope prediction
For Astrology
Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology
Consultation Mail to: bhakthiplanet@gmail.com