தேவையானவை
பால்
– 1 லிட்டர் பால்
மைதா
– 1 டீஸ்பூன் மைதா
எலுமிச்சம்
பழம் - 1
சீனி
- 21/2 கப்
நீர்
- 5 கப்
செய்முறை
முதலில்
பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை
பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட
வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக்
கட்டி, அதன் மீது அம்மிக்குழவி போன்ற ஏதாவதொரு ஒரு கனமான பொருளை வைத்தால். மிச்சமிருக்கும்
நீரும் இறங்கிவிடும். இது பனீர். பனீரை நன்றாக பிசைந்து வைக்கவும்.
இந்த
பனீர் 1 டீஸ்பூன் மைதாவைப் போட்டு நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சின்னச்சின்னதாய்
உருட்டிக் கொள்ளவும்.
தண்ணீர்விட்டு
சீனியை காய்ச்சவேண்டும். பாகு இறுக இறுக அவ்வப்போது தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க
வேண்டும். பாகு நன்கு கொதித்தக் கொண்டிருக்கும் பொழுதே, செய்து வைத்தள்ள பனீர் கோலியை
அதில் போட வேண்டும்.
ரசகுல்லா
வாசனையாக இருக்க வேண்டுமெனில், சீனிப் பாகில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு எஸன்ஸை
சேர்த்தக் கொள்ளலாம்.