தேவையான
பொருட்கள்
பால் - 1½ லிட்டர்
பொடித்த
சர்க்கரை – 350 கிராம்
முந்திரிப்
பருப்பு – 20 கிராம்
பிஸ்தாப்பருப்பு
– 20 கிராம்
சாரைப்பருப்பு
– 20 கிராம்
பச்சைக்
கற்பூரம் – சிறு துண்டு
ஏலக்காய்
பொடி – ½ டீஸ்பூன்
செய்முறை
அடிகனமான
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும்
பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, ஏடாக காய்ச்சியதும்
அடுப்பிலிருந்து இறக்கி பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். ஏலக்காய்ப் பொடியையும், பச்சைக்
கற்பூரத்தையும் சேர்க்கவும். வேறொரு பாத்திரத்தில் எடுத்து மேலாக மெல்லிய வில்லைகளாக
நறுக்கி வைத்து இருக்கும். பருப்புகளைத் தூவி விடவும். பாஸந்தியை அப்பொழுதே அல்லது
குளிர் சாதனப் பெட்டியில் வைத்தோ ஜில்லென்று பரிமாறலாம்.