நல்ல
பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக்
கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும்.
பால்
நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம்
போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும்
கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில்
போடவும். சாரைப் பருப்பு இருபது கிராம் சிறிது நெய்யில் வறுத்துப் போடவும். பிறகு ஏலக்காய்
இரண்டு. சாதிப்பத்திரி ஒருதுண்டு ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து பாயசத்தில் போட்டுக்
கலக்கி மூடவும். இளம் சூட்டில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.