ரோஜாப்பூ
ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம்
நம்மில் பலருக்குத் தெரியாது.
சாதாரண
சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி
அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி
முற்றிலுமாக குணமாகிவிடும்.
ரோஜாப்பூவினால்
தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும்
இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த
சுத்தியும் ஏற்படும். மலச்சிக்கல் அடியோடு அகலும். இது உடல் போஷாக்குக்கு ஒரு டானிக்காகவும்
பயன்படுகிறது.
ரோஜா
இதழ்களைத் தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப் பயிற்றை அத்துடன் சேர்த்து, நாலைந்து
பூலாங் கிழங்கையும் உடன்வைத்து விழுதாக அரைத்து எடுத்தக் கொள்ளவேண்டும். அவ்வாறு அரைக்கப்பட்ட
விழுதை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு இளம் சூட்டு நிரில்
தேய்த்துக் குளித்தால், உடல் கவர்ச்சிகரமான நிறம் பெறும். சரும நோய்கள் நீங்கும்.