தேவையான
பொருட்கள்
மைதா - ½ கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
– 1 குழிக்கரண்டி
செய்முறை
மைதா
மாவை தட்டில் பரப்பி, சிறிதளவு உப்ப 60% தண்ணீர் சேர்த்து உள்ளங்கையை பயன்படுத்தி நன்கு
பிசையவும்.(தயிரோ முட்டையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை)
பாத்திரத்தில்
பிசைந்து மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை
விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினால், நமக்கு ஒரே சீரான அளவு மாவு உருண்டை கிடைக்கும்.
அந்த உருண்டைகள் மீது எண்ணெய் சிறிது தடவி சிறிது நேரம் ஊற விடவும். பூரிக்கட்டையிலோ
(அ) தட்டிலோ சிறிது எண்ணெய் தடவி விட்டு அதன்மீது மாவு உருண்டையை வைத்து கையினாலோ
(அ) பூரிக்கட்டையினாலோ மிக மெல்லியதாக பேப்பர் போல் திரட்டிக் கொள்ளவும்.
திரட்டி
வைத்தள்ளதை கையில் எடுத்து முறுக்குபோல் சுருட்டி வைக்கவும். பின்பு அதனை கையினாலேயே
வட்ட வடிவமாகத் தட்டி, தேசைக்கல்லில் மேல்புறம், அடிபுறம் பொன்நிறமாகும் வரை வேக விட்டு
எடுக்கவும். பொன் நிறமானவுடன் எண்ணெய் சேர்த்தால் போதும்.
வேகவிட்டு
எடுத்த பின்பு சில பரோட்டாக்களை கையின் உள் பகுதியில் வைத்து இரண்டு ஓரங்களில் கையினால்
அழுத்தினால் தனித்தனி இதழாக வரும்.
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/