மனிதனின்
மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால
மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள். ஒருவரது மனதில் கவலை தோன்றும் போது, அவரது உடல்
தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்டையில்
உடலில் தோன்றும் விளைவுகளாகும்.
அதிக
அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகால்கள் இழுத்துக் கொள்ளுதல், சிலருக்கு
அதிர்ச்சியில் இதயமே நின்றுபோவது கூட நிகழ்கிறது.
மனதில்
தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம்.
அதிக
காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம்டி (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அதிக கசப்பு, பளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
ஆக
ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால்
தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம்.
For Astrology Consultation Mail to:
bhakthiplanet@gmail.com