Friday, September 26, 2014

உடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்


தங்கம்
 
உடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது.
உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது. 

தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

வெள்ளி 

வெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் தருகிறது. தாது புஷ்டியைத் தருகிறது. வெள்ளித் தட்டு, வெள்ளிக் கரண்டி அகியவற்றை தினமும் உபயோகிப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வெள்ளி உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடலில் தோன்றும் அயர்ச்சியை நீக்கி, குடலை நன்றாக இயங்க வைப்பதிலும் வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது. 

தாமிரம் (செம்பு)

இந்து மத ஆலயங்களில் செம்புப் பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீர், பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த நீர் மிகவும் மருத்துவச் சக்தி நிறைந்ததாகும். செம்புப் பாத்திரத்திலுள்ள நீர் தேகத்தின் ஆரோக்கியத்திற்கு நலல்து. வாத நோய்கள் கண்டவர்கள் செம்பு வளையலை கைகளில் இட்டுக் கொள்வது சிறந்த பலனளிக்கும். இருப்பினும் செம்புப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு நாட்களுக்கு மேல் ஊற்றி வைத்த நீரைப் பருகலாகாது. 

செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரும் துளசியும் சிறந்த கிருமி நாசினியாகும். இது உடலிலுள்ள விஷத்தன்மையைப் போக்கடிக்கும். 

இரும்பு 

இரும்புச் சட்டியில் வைத்த சில உணவுப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்குகிறது. இரும்புக் கல் தோசை வாயுத் தொல்லைகளைப் போக்ககிறது. அது போல் இரும்பு வாணலியில் வைத்த ரசம் சளி, இருமல் போன்றவற்றைக் குணமாக்குகிறது. இரும்புச் சட்டி புளியிலுள்ள விஷப்பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. 

மண் 

மண் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் இயற்கையும், சத்துக்களும் நிறைந்ததாகும். மண் பாத்திரத்தில் சமைத்த உணவில் உடலுக்குத் தேவையான கந்தகச் சத்து கிடைக்கும். காரீயக் குறைபாட்டால் கால்களில் உண்டாகும் வெடிப்புகள் மறையும். மண் குளிர்ச்சி பெறுவதோடு, எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.



 



For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com