புரட்டாசி
ஸ்பெஷல் கல்கண்டு சாதம்
தேவையான
பொருட்கள்
பச்சரிசி
– ½ கிலோ
பால்
– 2 லிட்டர்
கல்கண்டு
– 1 கிலோ
நெய்
– 150 கிராம்
முந்திரிப்
பருப்பு – 25 கிராம்
ஏலக்காய்
– 10 (அ) 12.
உலர்ந்த
திராட்சை – 10 கிராம்
செய்முறை
பச்சரியை
நன்றாகக் கழுவிக் களைந்து கல், நெல் நீக்கிக் கொள்ளவும். கல்கண்டைப் பொடியாகத் தூள்
செய்து கொள்ளவும். முந்திரிப் பருப்புகளைச் சின்னச் சின்னப் பொடித்துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும், ஏலக்காய்களைத் தட்டிப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில்
தேவையான அளவு தண்ணிர் வைத்து, அதாவது, ½ கிலோ அரிசி வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு
தண்ணீர் வைத்து, அடுப்பின் மீதேற்றி தண்ணீரை உஷ்ணப்படுத்தவும். தண்ணீர் சூடேறிக் கொதிக்கும்
வேளையில் – சுத்தம் செய்து களைந்து வைத்திருக்கும் அரிசியை எடுத்து அதில் போடவும்.
அரிசி நன்றாகக் குழைந்து வெந்தவுடன் தயாராக வைத்திருக்கும் பாலை எடுத்து அதில் ஊற்றவும்.
பால் ஊற்றியவுடன் மீண்டும் அதனை நன்றாக வேக விட வேண்டும். மேலும் சாதமானது குழையத்
துவங்கும். இந்த வேளையில் பொடி செய்து வைத்திருக்கும் கல்கண்டை அதில் போட்டு விட வேண்டும்.
அத்துடன்,
நெய்யையும், சேர்த்து ஊற்றி விடவும். ஏற்கனவே நறுக்கி வைக்கப் பட்டிருக்கக் கூடிய முந்திரிப்
பருப்புகளையும் இப்போது அதனுடன் போட்டுக் கலந்து விடவும். மேலும் உலர்ந்த திராட்சையான
கிஸ்மிஸ் பழத்தையும் இப்போது அதில் போடவும். அதன் பின்னர் ஏலக்காய் பொடியை அதன் மேல்
தூவி சிறிது நேரம் வரை மெல்லிய இளஞ் சூட்டில் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கி வைத்துவிட
வேண்டும். விருந்து சமயங்களிலோ, விழாக் காலங்களிலோ செய்து பரிமாற ஏற்றது இந்த கல்கண்டு
சாதம்… மேலும் படிக்க