Astrologer, Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau.
உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும். உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை.
ஆனால்.
பலர் உழைப்பு உழைப்பு என்று
இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப
பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, அவர் ஜாதகத்தில் ஏதாவது
கிரக கோளாறு இருக்கலாம். முதலில்
சொன்னேன் அல்லவா பிழைக்க தெரியாதவர்கள்
என்று, அதற்கு ஒரு உதாரண
கதை இருக்கிறது. அனேகமாக உங்களுக்கு இந்த
கதை தெரிந்திருக்கலாம்.
நான்கு
நண்பர்கள் இருந்தார்கள். அந்த நண்பர்கள் டாக்ஸி
வாங்கி ஓட்டி பிழைக்கலாம் என்ற
எண்ணத்தில் ஒரு டாக்ஸியை வாங்கினார்கள்.
ரெயில்வே ஸ்டேஷனில் டாக்ஸியோடு பயணிகளுக்காக காத்திருந்தார்கள். மற்ற டாக்ஸிகளில் பயணிகள்
ஏறி சென்றார்களே தவிர, இவர்களின் டாக்ஸி
பக்கம் எந்த பயணியும் வரவில்லை.
இப்படியே பல நாட்கள் சென்றது.
ஒரு பயணி கூட ஏறாததால்
டாக்ஸியை விற்கும் அளவுக்கு பணகஷ்டம் ஏற்பட்டது. கடைசியில் ஒருவருக்கு அந்த டாக்ஸியை நஷ்டத்தில்
விற்றார்கள் அந்த நண்பர்கள்.
இருந்தாலும்
நண்பர்களுக்கு ஒரு சந்தேகம். ஏன்
நம் டாக்ஸியில் மட்டும் எந்த பயணியும்
ஏறுவதில்லை? இதை டாக்ஸியை வாங்கியவரிடமே
கேட்டார்கள்.
அதற்கு
அந்த நபர், “நீங்கள் நால்வரும்
டாக்ஸிக்கு உரிமையாளர்களாக இருக்கலாம். அதற்காக எப்போதும் நீங்கள்
நால்வருமே அதில் அமர்ந்திருந்தால் எப்படி
பயணிகள் ஏறுவார்கள்?” என்றார்.
இப்படிதான்
சிலருக்கு முன்னேற வேண்டும் என்ற
ஆர்வத்தில் உழைத்தாலும் முன்னேற தெரியாமல் அவதிப்படுகிறார்கள்.
உழைப்போடு
புத்திசாலிதனம் வேண்டும். அதற்கு நேரமும் ஒத்துழைக்க
வேண்டும. பல வருடங்களுக்கு முன்
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில்
ஒர் எரிமலை வெடித்துத் தீப்பிழம்பைக்
கக்கியது. மைல் கணக்கில் சாம்பல்
பரவி மேடை போல் ஆனாதும்,
அந்த இடத்திற்கு பிழைக்க தெரிந்த அதிர்ஷ்டசாலி
ஒருவன் வந்தான்.
“இந்த
எரிமலை சாம்பல் லேசானது. இந்த
உலக அதிசயமான சாம்பல் உங்கள் வீட்டில்
இருக்கிறதா?” என்று விளம்பரப்படுத்தி, அந்த
சாம்பலை விற்று பணம் ஆக்கினான்.
பிழைக்க
தெரிந்தவன் உழைக்கிறான். அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால், உழைக்க தெரிந்தவன் முன்னேறுகிறான்.
முன்னேற்ற
தடைக்கு காரணம் என்ன? என்று
ஜோதிட ரீதீயாக பார்க்கும்போது, முன்னேற்றத்தை கொடுக்கும் கிரகம், ஜாதகத்தில் முன்னேற்றத்தை
காட்டும் இடம் எப்படி இருக்கிறது?
என பார்த்தால் தெரிந்துவிடும்.
ஒருவரின்
ஜாதகத்தில் முன்னேற்றத்தை குறிக்கும் பாவம், லக்கினத்திற்கு 11-ம்
இடமாகும். அதாவது, இதனை “லாபஸ்தானம்”
என்று அழைக்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த
11-ம் ஸ்தானத்தில் 2,4,5,7,9,10,11-க்கு உரியவர்கள் அமர்ந்திருந்தாலும்
அல்லது 11-ம் வீட்டுக்குரியவன், 2,4,5,7,9,10-ல் இருந்தாலும், படிப்படியான
முன்னேற்றமே. ஆனால் இவர்களுடன் 6,8,12-க்குரியவர்கள்
சேரக்கூடாது.
அதுபோல, இராகு, கேதுவும்
சேரக்கூடாது சேர்ந்தால் முன்னேற்றம் ஆமை வேகத்தில் இருக்கும்.
ஆகவே ஒருவரின் ஜாதகத்தில் இந்த 11-ம் பாவத்தின்
,பலம்-பலவீனத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்பட்டால்
பலன் பெறலாம்.
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/