Wednesday, September 25, 2013

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by Niranjana
 
நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்

ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம் இராகுவுக்கு பலம் சேர்ப்பதாக விதிக்கப்பட்டிருக்கிறது

இதைதான்ராகுகாலம்என்கிறோம்.. 

மாய கிரகமான இராகுவின்…மேலும் படிக்க 

Saturday, September 21, 2013

புரட்டாசி ஸ்பெஷல் கல்கண்டு சாதம்

புரட்டாசி ஸ்பெஷல் கல்கண்டு சாதம்
    
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ½ கிலோ
பால் – 2 லிட்டர்
கல்கண்டு – 1 கிலோ
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
ஏலக்காய் – 10 (அ) 12.
உலர்ந்த திராட்சை – 10 கிராம்

செய்முறை 

பச்சரியை நன்றாகக் கழுவிக் களைந்து கல், நெல் நீக்கிக் கொள்ளவும். கல்கண்டைப் பொடியாகத் தூள் செய்து கொள்ளவும். முந்திரிப் பருப்புகளைச் சின்னச் சின்னப் பொடித்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், ஏலக்காய்களைத் தட்டிப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணிர் வைத்து, அதாவது, ½ கிலோ அரிசி வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு தண்ணீர் வைத்து, அடுப்பின் மீதேற்றி தண்ணீரை உஷ்ணப்படுத்தவும். தண்ணீர் சூடேறிக் கொதிக்கும் வேளையில் – சுத்தம் செய்து களைந்து வைத்திருக்கும் அரிசியை எடுத்து அதில் போடவும். அரிசி நன்றாகக் குழைந்து வெந்தவுடன் தயாராக வைத்திருக்கும் பாலை எடுத்து அதில் ஊற்றவும். பால் ஊற்றியவுடன் மீண்டும் அதனை நன்றாக வேக விட வேண்டும். மேலும் சாதமானது குழையத் துவங்கும். இந்த வேளையில் பொடி செய்து வைத்திருக்கும் கல்கண்டை அதில் போட்டு விட வேண்டும். 

அத்துடன், நெய்யையும், சேர்த்து ஊற்றி விடவும். ஏற்கனவே நறுக்கி வைக்கப் பட்டிருக்கக் கூடிய முந்திரிப் பருப்புகளையும் இப்போது அதனுடன் போட்டுக் கலந்து விடவும். மேலும் உலர்ந்த திராட்சையான கிஸ்மிஸ் பழத்தையும் இப்போது அதில் போடவும். அதன் பின்னர் ஏலக்காய் பொடியை அதன் மேல் தூவி சிறிது நேரம் வரை மெல்லிய இளஞ் சூட்டில் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கி வைத்துவிட வேண்டும். விருந்து சமயங்களிலோ, விழாக் காலங்களிலோ செய்து பரிமாற ஏற்றது இந்த கல்கண்டு சாதம்…  மேலும் படிக்க 









Thursday, September 19, 2013

மண் சட்டியில் சாப்பிடும் பணக்கார சாமி

Written by Niranjana
உலகின் பணக்கார கடவுள் யார் என்றால் எளிதாக சொல்லிவிடலாம் ஸ்ரீமந் நாராயணன் என்று. பெருமாள் கோயில்கள் அனைத்தும் மகிமை வாய்ந்தவை என்றாலும், திருப்பதி பெருமாளுக்கு சைவம்-வைணவம் என்ற பாகுபாடு கிடையாது. அவ்வளவு ஏன் பிற மதத்தினர் பலரும் திருப்பதி பெருமாளுக்கு பக்தர்களாக உள்ளனர். காக்கும் தெய்வமான பெருமாளை வழிபட வழிபட வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும்

அத்தகைய நல்ல திருப்பம் தந்த தெய்வத்திற்கு நன்றி கடனாக நாம் பணத்தையோ, தங்க ஆபாரணங்களோதான் தர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படி இருந்தாலும் அவற்றை ஏன் நாம் காணிக்கையாக தருகிறோம்? என்றால்,
இறைவா.. நீ தந்த செல்வங்களின் ஒரு சிறுபகுதியை, நான் நன்றி உள்ளவன் என்பதை உணர்த்தவே உனக்கே காணிக்கை ஆக்குகிறேன். உன் திருக்கோயில் வளர்ச்சியை கண்டு, என் பக்தியையும், நீ எனக்கு தந்த அந்தஸ்தையும் இந்த உலகம் அறியட்டும்.” என்கிற காரணத்துக்காகதான்.

நம் வசதிக்கு ஏற்ப சிறு காணிக்கையானாலும் நமக்கு இஷ்டமான திருக்கோயில்களுக்கு தந்திடும்போது, அவை அந்த திருக்கோயில்களின் சார்பாக அன்னதானம் போன்ற எண்ணற்ற மக்கள் நலப்பணிகளுக்கு சென்றடைகிறது.

என் வசதிக்கு ஏற்ப நான் ஒரு ரூபாய் காணிக்கை தருவதால் இறைவன் மகிழ்ச்சி அடைவானா? என நினைக்க வேண்டாம். தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் இருந்தாலும், ஒரு ஏழை தருகிற ஒரு ரூபாய்தான், அந்த தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது ரூபாயை ஒரு லட்சமாக உயர்த்துகிறது. ஆகவே காணிக்கை எதுவானாலும்அது எவ்வளவு ஆனாலும் நம் அன்பான பக்தியால் அதற்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது.

காது கொடுத்து கேட்கும் தெய்வம்

திருப்பதி பெருமாள் சில யுகங்களுக்கு முன்புவரை தன்னை நாடிவரும் பக்தர்களிடம் பேசியதாகவும், பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பேசுவதை நிறுத்திவிட்டு பக்தர்களின் குறையை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வு தருவதாகவும் ஸ்தலபுராணம் சொல்கிறது.

குயவன் பீமனின் புகழ்

முன்னோரு காலத்தில் பீமன் என்ற குயவன் இருந்தான். அவன்…மேலும் படிக்க