Written by NIRANJANA
கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.
வாழ்வில் வெற்றி பெற எது தேவை?
ஒரு
முனிவர் இருந்தார். அவர் 100 வயதை கடந்தவர். அவரிடம்
நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சிஷ்யன்,
“சுவாமி… வாழ்க்கையில் வெற்றி பெற என்ன
வேண்டும்.?” எனக் கேட்டான். அதற்கு
அந்த குரு, தன்னுடைய பொக்கை
வாயை காட்டி, “இப்படி இருக்க வேண்டும்.”
என்றார்.
குரு
தந்த பதில் எந்த மாணவர்களுக்கும்
புரியவில்லை. “என்ன சொல்கிறீர்கள் குருவே?”
என்றார்கள் கோரஸாக மாணவர்கள்.
”சீடர்களே…
என் வாய்க்குள் பல் இருக்கிறதா.?” என்று
கேட்டு தன் வாயை திறந்து
காட்டினார்.
“இல்லை”
என்றார்கள் மாணவர்கள்.
“உள்
நாக்கு, வெளி நாக்கு இருக்கிறதா.?”
என்றார் குரு.
“ஆம்,
இருக்கிறது.” என்றார்கள் மாணவர்கள்.
“சில
வருடங்கள் முன்புவரை பலசாலியாக இருந்த பற்கள் இப்போது
இல்லை. ஆனால் மென்மையான உள்நாக்கும்,
வெளிநாக்கும் எப்போதும் என்னுடனே இருக்கிறது. ஒரு வேலை எனக்கும்
மற்றவர்களுக்கும் பாதகமாக அது செயல்பட்டாலும்
மறுவிநாடியே அதே நாக்கு, சாதகமாகவும்
மாறிவிடும். அதுபோலதான், நீங்களும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்
என்றால், பல்லை போல் பலசாலியாக
இருந்தால் மட்டும் போதாது. நாக்கை
போல மென்மையாகவும் அதே சமயம், மென்மையான
நாக்கை அடக்கியும் வைத்திருந்தால் எந்த காலமும் நல்ல
காலமாகவே இருக்கும். வெற்றி மேல் வெற்றி
கிட்டும்.” என்றார் குரு.
கசப்பான
மருந்துதான் நோய் தீர்க்கும். அதுபோல்
நாக்கு கற்று தரும் பாடம்
என்னவென்றால், வாழ்க்கை என்றால் என்ன?, எப்படி
பேசினால் வாழ முடியும்?, எப்படி
பேசினால் வீழ்ச்சியை தரும்? என்பதை கற்று
தருகிறது.
நாக்கைபோல்தான்
சனீஸ்வர பகவானும்.
நாம்
அவருக்கு மரியாதை தந்து வணங்கினால்,
அவர் நமக்கு நன்மை செய்வார்.
இல்லையென்றால், சிவனே ஆனாலும் பாதாளத்தில்
தள்ளி விடுவார்.
சனீஸ்வரர்,
வாழ்க்கை பாடத்தை கற்று தருகிறார்.
வாழ்க்கை
என்றால் என்ன? எப்படி வாழ
வேண்டும்? நம்பிக்கைக்குரியவர் யார்? துரோகி யார்?
இப்படி எண்ணற்ற வாழ்வின் மேன்மைக்கு
தேவையானவற்றை அனுபவ பாடமாக கற்று
தருபவர் சனீஸ்வர பகவான்.
திருநரையூரில் குடும்பத்தோடு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்
ஒரு
அதிகாரியிடம் வேலை ஆக வேண்டும்
என்றால், அவருடைய குடும்பத்தினரின் ஆதரவை
பெற்றாலே நிச்சயம் நம் வேலை நடந்து
விடும் என்று சொல்வார்கள். அதுபோல,
சனீஸ்வரரால் தொல்லை என்றால், தனித்து
இருக்கும் சனி பகவானை வணங்கினாலும்,
திருநரையூரில் தன்னுடைய இரு தேவிகளான மந்தாதேவி,
ஜேஷ்டாதேவியுடனும், தன் பிள்ளைகளான குளிகன்,
மாந்தி என்று குடும்பத்தோடு வீற்றிருக்கும்
சனீஸ்வர பகவானை வணங்கினால் கை
மேல் பலன் கிடைக்கும்.
இந்த
திருக்கோயிலுக்கு தசரத சக்கரவர்த்தி, தன்
உடல் பிணி தீர இங்கு
இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி,
தம்முடைய நோயை நிவர்த்தி செய்துக்கொண்டார்.
அதேபோல்
ஸ்ரீராமர், இராவணனை வதம் செய்த
பிறகு, இந்த தலத்தில் புனித
நீராடி, மணலால் லிங்கம் செய்து
வழிபட்டார். ஸ்ரீஇராமர் வழிபட்ட லிங்கம், “இராமநாத
ஸ்வாமி லிங்கம்” என்று அழைக்கப்படுகிறது.
பரிகாரம்
இந்த
திருக்கோயில், சர்வேஸ்வரரான சிவபெருமானுக்குரியது என்றாலும், சனீஸ்வர பகவானும் புகழுடன்
இங்கே வீற்றிருந்து மக்களுக்கு அருள் மழை பொழிகிறார்.
இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில்
வஸ்திரம் சமர்பித்து, அத்துடன் தேவிகளுக்கும் வஸ்திரம் சமர்பித்து, பூமாலை அணிவித்து, நல்லெண்ணைய்
தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்,
பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்,
நன்மைகளை அருளும்படி நமக்காக சனீஸ்வர பகவானிடம்
முறையிடுவார்கள் மந்தாதேவியும், ஜேஷ்டாதேவியும்.
இதன்
பலனாக நீண்ட காலமாக தொல்லை
கொடுத்துக்கொண்டு இருந்த அனைத்து கஷ்டங்களும்
– தோஷங்களும் விலகியோடி நன்மைகள் தேடி வரும்.!
‘ஓம் காக
த்வஜாய வித்மஹே
கட்க
ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.’
தந்நோ மந்த ப்ரசோதயாத்.’
Face Reading Part 1 - Click
Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg
For Astrology Consultation Mail to:
bhakthiplanet@gmail.com
© 2017 bhakthiplanet.com All
Rights Reserved