ஆனி திருமஞ்சனம் (30.06.2017)
Written by NIRANJANA
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள்.
சிவபெருமானின்
நடனத்தை காண தேவர்கள், முனிவர்கள்
தவம் இருந்தார்கள். விஷ்ணுபகவானும் சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.
“சிவ-சக்தி ஒன்றே“ என்று
பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார். அதை கேளாமல் இருந்த
பிருங்கி முனிவர், பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை
இழந்தார்.
சிவலிங்கத்தை
தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்கவேண்டும். ஆனால் நடராஜரை தரிசித்தால்
அம்பிகையையும் தரிசித்தது போன்றது என்கிறது சாஸ்திரம்.
காரணம், நடராஜரின் இடது பாகம் சக்திதேவியின்
பாகம். அதனால் நடராஜரை தரிசிக்கும்
போது, அவரத இடதுகாலையும் தரிசித்து
வணங்கினால், சிவ-சக்தியின் அருளாசி
முழுமையாக கிடைக்கும்.
மார்க்கண்டேயரை
காப்பாற்ற எமனை அந்த இடதுகால்தான்
உதைத்தது என்கிறது புராணம்.
நடராஜரின்
வலதுபாகம் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும். இடதுபாகம் சக்திதேவியின் பாகமானதால் சக்திதேவியின் பக்தர்களின் வாழ்வில் இருக்கும் தொடர் இன்னல்களை நீக்கி
வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும்.
சிவபெருமானின்
நடனத்தை காண கண் கோடி
வேண்டும். அத்தனை சிறப்புமிக்க நடனம்
அது. ஆனி திருமஞ்சனத்தில் சிவபெருமானின்
அபிஷேகத்தையும், நடனத்தையும் தரிசித்து
சிவ-சக்தியின் பேரருள் கிடைத்து, கஷ்டங்கள்
அனைத்தும் நீங்கி, ஏற்றங்களையும், நல்ல
மாற்றங்களையும் பெற்று வளமோடும், நலமோடு வாழ்வாங்கு வாழ
உமா-மகேஸ்வரன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
“ஓம்
நமசிவாய”
“தென்னாடுடைய சிவனே
போற்றி.
என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி.”
திருசிற்றம்பலம்
!
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannelTamil New Year Rasi Palangal 2017 –2018 All Rasi palangal Click Here
2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
Face Reading Part 1 - Click Here | சாமுத்ரிகா லட்சணம்
பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg
For Astrology Consultation Mail to:
bhakthiplanet@gmail.com
© 2017 bhakthiplanet.com All
Rights Reserved