Friday, June 30, 2017

RAHU KETU PEYARCHI Palangal 2017-2018

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

பொது பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 இராசிகாரர்களுக்கும் தெரிந்துக் கொள்ளலாம்.

இராகு பகவான் ஆயில்யம் நட்சத்திரமான புதன் சாரத்திலும், கேது பகவான் அவிட்ட நட்சத்திரமான செவ்வாய் சாரத்திலும் பெயர்ச்சி ஆகிறார்கள். இது பெரும் நன்மையே கொடுக்கும் என்றாலும் பன்னிரெண்டு இராசிகாரர்களுக்கு என்ன பலன் அமைய போகிறது என்று இப்போது அறிந்துக் கொள்ளலாம்.
மேஷ இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 4-ம் இடத்திற்கு இராகுவும், 10-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். சுகஸ்தானத்தில் இராகு, ஜீவனஸ்தானத்தில் கேதுவும் அமர போகிறார்கள். இந்த பெயர்ச்சியால் இராகு புதன் சாரத்திலும், கேது செவ்வாய் சாரத்திலும் அமைவது நன்மையே தரும். இதுவரை வாடகை வீட்டில் வசித்த பலர், புது மனை புகுவிழா நடத்தி சொந்த வீட்டுக்கு குடியேறும் யோகம் உண்டு. வண்டி, வாகனம் வாங்கும் சிறப்பு ஜருராக நடைபெறும். தடைப்பட்ட கல்வி தொடரும். வழக்கு இருந்தாலும் சாதகமாக முடியும். தாயாருக்கு உடல்நலம் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உடல் ஆரோக்கியம் பெறுவார். உத்தியோகத்தில் இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். குடும்பஸ்தானத்திற்கு 9-ம் இடத்தில் கேது உள்ளதால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். மேலும் சிலருக்கு சுயதொழில் தொடங்க நல்ல சந்தர்ப்பம் அமையும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் புரிவோர் நல்ல ஆதாயம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் கொடுக்கும். பொதுவாக இந்த இராகு-கேது பெயர்ச்சி யோகத்தை தந்திடும். நல்வாழ்த்துக்கள்.
ரிஷப இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு இராகுவும், 9-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இராகு புதன் சாரத்திலும், கேது செவ்வாய் சாரத்திலும் அமைவது எதிர்பாரா தனலாபம் தர இருக்கிறது. 3-ம் இடம் கீர்த்திஸ்தானம், 9-ம் இடம் பாக்கியஸ்தானம் ஆகும். தொட்டது துலங்கும். சகோதர-சகோதரிகளுக்கு நன்மை செய்யும். மறைந்திருந்த உங்கள் கீர்த்தி (புகழ்) வெளிப்படும். பலரும் பாராட்டும்படியான வாழ்க்கை அமையும். தந்தை வழியில் நன்மை உண்டு. திருமண யோகம் தள்ளி வந்தது இனி கூடி வரும். கடன் சுமை குறையும். வெளிநாடுகளுக்கு செல்லும் பாக்கியம் உண்டு. மேல்படிப்பு அமையும். புத்திரஸ்தானத்தின் சாரத்தில் இராகு அமர்வதால், குழந்தை பாக்கியத்தில் இருந்த தடை நீங்கி தெய்வ அனுகிரகத்தால் புத்திர பிராப்தி கிடைக்கும். சுகஸ்தானத்திற்கு 12-ம் இடத்தில் இராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் உடல்நலனில் சற்று கவனம் தேவை. எண்ணெய், வாகனம் விற்பது போன்ற தொழில் நல்ல ஆதாயம் கொடுக்கும். பொதுவாக, 3,6,11-ல் இராகு அமைந்தால் பெரும் தனலாபம் கொடுக்கும். இந்த இராகு-கேது பெயர்ச்சி அமோகமான பெயர்ச்சிதான். நல்வாழ்த்துக்கள்.
மிதுன இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 2-ம் இடத்தில் இராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் அமைகிறார்கள். அதாவது தனஸ்தானத்தில் இராகுவும், அஷ்டமஸ்தானத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். பயம் வேண்டாம். அஷ்டம கேது கெடுக்காது. காரணம், உங்கள் இராசிக்கு லாபாதிபதி சாரத்தில் அதாவது செவ்வாய் சாரத்தில் இராகு அமர்வதால், குடும்பத்தில் நிலவிய பிரச்னைகளை தீர்த்து வைக்கும். இந்த நாள்வரை இருந்த வழக்கு முடிவுக்கு வரும். கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்து சிலருக்கு கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். சிலருக்கு எதிர்பாராமல் உத்தியோக உயர்வு அமையும். அதேசமயம் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வாகன விஷயத்திலும் பொறுமை தேவை. தேவையில்லா செலவு வரும். அதனால் பணத்தை கவனமாக செலவு செய்யவும். வீண் வாக்கு வாதமும் வேண்டாம். ஜீவனத்திற்கு 2-ம் இடத்தில் இராகு இருப்பதால் தொழில்துறையில் கூட்டாளி வந்து சேர்வார்கள். ஜவுளி, பெண்கள் அழகு சாதனம், குழந்தைகள் ரெடிமேட் போன்ற தொழில் சாதகமாக அமையும். இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பெயர்ச்சிதான். நல்வாழ்த்துக்கள்.
கடக இராசி அன்பர்களேஉங்கள் இராசியில் இராகுவும், மகரத்தில் கேதுவும் அதாவது சப்தமஸ்தானத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஜென்மத்தில் இராகு என்று பயப்பட வேண்டாம். கடக இராகு யோக இராகு. இந்த பெயர்ச்சி பெரிய முன்னேற்றத்தை தரும். உங்கள் திட்டம் வெற்றி பெரும். மறைமுக சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். எதிரிகள் தொல்லை நீங்கும். 12-க்குரியவன் சாரத்தில் இராகு அமரப்போவதாலும், 10-க்குரியவன் சாரத்தில் கேது அமரப்போவதாலும் சுற்றி இருந்த பகை, பிரச்னைகள் அத்தனையும் பஞ்சு போல் பறந்து விடும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை அமையும். குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் உதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் தனலாபம் உண்டு. எதிர்பாராமல் சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். இதுநாள்வரை இருந்த குடும்ப பிரச்னைகள் பனிபோல் நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நலனில் மட்டும் கவனம் தேவை. உழைப்பு அதிகரிக்கும். எதையும் சாதித்து காட்டுவீர்கள்இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு பெரும் யோகம் தரும் பெயர்ச்சிதான். நல்வாழ்த்துக்கள்.
சிம்ம இராசி அன்பர்களேஇதுவரை ஜென்மத்தில் இருந்த இராகு 27.07.2017 முதல் கடக இராசிக்கும், சப்தமத்தில் இருந்த கேது, மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 12-ல் இராகு போகலாமா? என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும்.  இராகு பகவான் தன, லாபாதிபதி சாரம் பெறுகிறார். அதாவது புதன் சாரத்தை பெறுவதால் மிகுந்த யோகத்தை தந்திடும். அதுமட்டுமல்ல, பொதுவாக 6-ல் கேது இருந்தால் சத்ரு ஜெயம் உண்டாக்கும். பகை மறையும். நோய்நொடி தீரும். கடன் சுமை குறையும். திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். இதுநாள்வரை ஜென்மத்தில் இருந்த இராகு தீராத பிரச்னைகளை உண்டாக்கி இருக்கும். இனி கவலையில்லை. துன்பங்கள் தூக்க வீசப்பட்டு, இன்பமான வாழ்க்கை அமையும். தொழில்துறை முன்னேறும். அரசாங்க உதவிகள் கிட்டும். புண்ணியஸ்தலங்களுக்கு பயணம் செல்லும் பாக்கியம் உண்டாகும். வேலை வாய்ப்பு வரும். வீடு, மனை அமையும். ஆனால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். பொதுவாக மற்றபடி இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகமான பெயர்ச்சிதான். நல்வாழ்த்துக்கள்.
கன்னி இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் கேதுவும், 11-ம் இடத்தில் இராகுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இராகு லாபஸ்தானத்திற்கும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி ஆவதால், நல்ல முன்னேற்றம் கொடுக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். கேது பகவான், 3,8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் வழக்கு முடிவுக்கு வரும். லாபத்தில் இருக்கும் இராகு, வெளிநாட்டில் உள்ளவர்களின் உதவியை தாராளமாக பெற்று தருவார். சிலருக்கு ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபமாக அமையும். இதுநாள்வரை இருந்த மனக்குழப்பம் தீரும். ஜீவனத்தில், உத்தியோகத்தில் நல்ல மாற்றம் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தாய்-தந்தைக்கு பெருமை உண்டாகும்படி நற்காரியங்கள் செய்வீர்கள். தடைப்பட்ட கல்வி தொடரும். மனைவியால் நன்மைகள் நடக்கும். 8-க்குரிய சாரத்தில் கேது இருப்பதால், கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். நண்பர்கள்தானே என்று அதிகம் நம்ப வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. பொறுமையாக இருக்க வேண்டும். அவசரம் கூடாது. பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மையே செய்யும். நல்வாழ்த்துக்கள்.

துலா இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் கேதுவும், ஜீவனஸ்தானத்தில் இராகுவும் 27.07.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார்கள். 2,7-க்குரிய செவ்வாய் சாரம் பெற்ற கேது 4-ம் இடத்தில் அமர்வதால் வீடு, உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி ஏற்படும். மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். வாகனம் வாங்கவும் வசதிகள் கிடைக்கும். அதேசமயம், வாகனம் ஓட்டும்போது கவனமாக செல்லுங்கள். 10-ம் இடத்தில் இருக்கும் இராகு, திருமணம் செய்து வைக்கும். 10-ம் இடம் தொழில்ஸ்தானம் தானே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இராகு, புதன் சாரம் பெற்றதால், குடும்பத்தில் சுபசெலவுகள், சிலருக்கு திருமண யோகம் இப்படி நல்லதே செய்வார். அதே இராகு, 9-க்கு 2-ல் இருப்பதால் பெற்றோருக்கு சில நேரங்களில் உடல்நல பிரச்னைகளையும் செய்வார். விரயாதிபதி சாரத்திலும் இருப்பதால் தேவைக்கேற்ப செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகள் வேண்டாம். கேது பகவானால் சிலருக்கு நண்பர்கள் மூலமாக பிரச்னைகள் வரும். ஆகவே கவனமாக இருங்கள். தொழிலை பொறுத்தவரையில் ஓட்டல், உணவு பொருட்கள் விற்பனை பிரமாதமாக நடைப்பெறும். சிலருக்கு இதில் பெருத்த லாபம் கிட்டும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அருமையாக இருக்கும். நல்வாழ்த்துக்கள்.
விருச்சிக இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு கீர்த்திஸ்தானத்தில் அதாவது 3-ம் இடத்தில் கேதுவும், 9-ம் இடமான பாக்கியஸ்தானத்தில் இராகுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். கேது, இராசியாதிபதி சாரம் பெற்றாலும், 6-ம் அதிபதி சாரமும் பெற்றதால் முக்கியமாக தேவையில்லா சிந்தனை, படபடப்பு கூடாது. 9-ம் இடத்தில் இராகு இருப்பது நன்மையை செய்யும். பொருளாதாரம் உயரும். திட்டங்கள் நிறைவேறும். கணவன், மனைவி உறவுக்குள் பிரச்னை இருந்தாலும் தீரும். பழைய வாகனம் விற்று புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் வரும். கல்வியால் நல்ல பயன் கிடைக்கும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு புகழ், கீர்த்தி உண்டாகும். அன்னிய நாட்டவரால் ஆதாயம் பெறுவீர்கள். கலைதுறையில் உள்ளவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக செயல்படவும். இராகு, அஷ்டமாதிபதி சாரம் பெற்று அமர்ந்ததால் தாய், தந்தை உடல்நலனில் கவனம் தேவை. அரசாங்கத்தால் நன்மைகள் உண்டாகும். பிறருக்கு ஜாமீன் தருவதை தவிர்க்கவும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகமான பெயர்ச்சியாக அமையும். நல்வாழ்த்துக்கள்.
தனுசு இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், அஷ்டமஸ்தானத்தில் இராகுவும் பெயர்ச்சி செய்வது நன்மையும், தீமையும் கலந்தே பலன் தரும். அதிலும் நன்மையே அதிகம் செய்யும் என்பது ஆறுதல் தரும் விஷயம். 8-ம் இடத்திற்கு இராகு சென்றாலும், லாபாதிபதி சாரத்தில் அமர்வதால் கஷ்டங்கள், கடன்கள் தீரும். தடைப்பட்ட நின்ற கட்டடம் கட்டி முடிக்கப்படும். பலருடைய எதிர்ப்புகள் சிதைந்தோடும். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். வேலை தேடிகொண்டிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முடங்கிவிட்ட தொழில் புத்துயிர் பெறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். இருப்பினும், கேது பகவானால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். 2-ல் இருப்பதால் கவனம் தேவை. விரயங்கள் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. கூட்டு தொழிலில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணக்கு வழக்கில் கூட கவனமாக இருக்க வேண்டும். யோகமான காலமாக இருந்தாலும் கேது சற்று சிரமத்தை கொடுப்பார். ஆகவே உஷாராக அடி எடுத்து வைப்பது நன்மையை தரும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும் நல்வாழ்த்துக்கள்.
மகர இராசி அன்பர்களேஉங்கள் இராசியில் கேது பகவான் 27.07.2017 முதல் அதிகாரம் செய்ய போகிறார். ஜென்ம கேது பாதிக்குமா? என்று பார்த்தால் பாதிக்காது. சுகாதிபதி செவ்வாய் சாரத்தில் கேது இருப்பதால் பயம் இல்லை. தெய்வ தரிசனம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணங்கள் செல்லும் சந்தர்ப்பம் அமையும். மனதில் குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். இராகு பகவானால் பெருத்த நன்மை உண்டாகும். என்னடா வாழ்க்கை என்று சலிப்பாக இருந்த காலம் மாறும். ஏழாமிட இராகு பெருத்த நன்மை செய்வார். பாக்கியாதிபதி சாரத்தில் அமர்ந்ததால் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும். சொத்து விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். சொந்த வீடு, வாகனம் அமையும். கடன்கள் குறையும். ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட கல்வி தொடங்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தைபேறு இப்படி சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. யாருடனும் கருத்து வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாரா தனபிராப்தி உண்டாகும். நோய் நொடி தீரும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகமான பெயர்ச்சியாக அமையும். நல்வாழ்த்துக்கள்.
கும்ப இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் இராகுவும், ஜென்மத்தில் அதாவது உங்கள் இராசியிலேயே கேது பகவானும் அமர்ந்துள்ளனர். ஜென்மத்தில் கேது இருந்தாலும் பயம் வேண்டாம். 10-க்குரிய செவ்வாய் சாரத்தில் இருப்பதால், புதிய தொழில் துவங்குவீர்கள். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகம் இருப்பினும், ஆதாயமும் உண்டு. இருப்பினும், அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். பாவ கிரகம் 6-ம் இடத்தில் இருந்தால் அமோக வெற்றி கொடுக்கும். தொட்டது துலங்கும். கடன் சுமை குறையும். எதிர்பார்த்தது நன்மையாக முடியும். புதிய கட்டடம் கட்டுதல், பிளாட் வாங்குவதும் சுலபமாக நடக்கும். உறவினர் வருகை அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நல்லவிதமாக நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். பல நாட்களாக பிடித்திருந்த பிணி நோய்நொடி நீங்கும். எதிர்பாரா உதவிகள் தேடி வரும். சிலருக்கு பயணங்கள் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள், வங்கி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அவசரம் கூடாது. நண்பர்களாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மையான பெயர்ச்சியாக அமையும். நல்வாழ்த்துக்கள்.
மீன இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் இராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் 27.07.2017 அன்று பெயர்ச்சி ஆகிறார்கள். பிரமாதமாக இருப்பீர்கள். பிள்ளைகளுக்கு பெரும் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு தீரும். சந்தோஷங்கள் பல நிகழும். இதுநாள்வரை இருந்த மனக்குழப்பம் தீரும். உறவினர்கள் தொடர்பு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தெய்வ அனுகிரகத்தால் நல்லபடியாக நடைபெறும். ஆபரண சேர்க்கை உண்டு. நிலம், வீடு வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்வி தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. விரோதியும் நண்பனாவான். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு ஷேர் மார்கெட்டில் லாபம் கிட்டும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் பெரும் லாபம் உண்டு. பொதுவாக அன்னிய நாட்டு வியபாரத்தில் நல்ல வருமானம் பெறுவீர்கள். வாகனம் புதுபித்தல், புதிய வாகனம் வாங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் நடைப்பெறும். சொத்துக்கள் கைகூடும். வழக்கு இருந்தால் சுமுகமாக முடியும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அருமையான பெயர்ச்சியாக அமையும். நல்வாழ்த்துக்கள்.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018 | RAHU KETU PEYARCHI Palangal 2017-2018 AllRasi Palan Click Here 


Tamil New Year Rasi Palangal 2017 –2018  All Rasi palangal Click Here 

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8



Face Reading Part 1 - Click Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg

Mole Reading Part 1 - Click Here | மச்ச பலன்கள் https://www.youtube.com/watch?v=iiYiWMapfpg


For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved