Sunday, July 28, 2013

யந்திரமும் – மந்திரமும்! வாஸ்துகலை கட்டுரை

Written by K.Vijaya Krishnarau

ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி வேலை செய்யாது. அதுபோலவே, நம்முடைய ஜாதகம்தான் எந்திரம். நாம் வசிக்கும் வீடு, இடம்தான் மந்திரம்.

இங்கு மந்திரம் என நான் குறிப்பிடுவது நாம் வாழக்கூடிய, வாழ்ந்துக்கொண்டிருக்கிற இல்லம், சரியான மந்திரமாக அதாவது வாஸ்துவாக இல்லாவிட்டால் ஜாதகம் என்கிற யந்திரம் வேலை செய்யாது. அப்படியே செய்தாலும் பல தடைகள், இன்னல்களை கடந்து, யோகங்கள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், ஆமை நகர்வது போல மெதுவாகதான், எதுவும் அமையும்.

என்னுடைய அனுபவத்தில் பலர் கூற கேட்டு இருக்கிறேன். பல வருடங்களாக படாதபாடுபட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை. கடன், நோய்நொடி தொல்லை தாங்காமல் வீட்டை மாற்றினேன். ஆண்டவன் அருளால் மனநிம்மதி, முன்னேற்றம் தெரிந்தது என்றும், சிலர் வீட்டில் சற்று மாறுதல் செய்தேன், இப்போது  நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்று சொல்வதை கேட்டு இருக்கிறேன்.

சிறு சிறு மாறுதல்கள் செய்து நல்ல முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர். வாஸ்து சரி இல்லை என்றால் வீட்டையே இடித்து மாற்றுவது அல்ல. இருக்கிற அமைப்பிலேயே மாறுதல் செய்தாலும் நல்ல பலனை பெற முடியும். உதாரணமாக, தென்கிழக்கிலும், வடமேற்கிலும் சமையலறை அமைப்பது சிறப்பானது என்கிறது கட்டட சாஸ்திரகலை. ஒருவேளை, இந்த பகுதிகளுக்கு மாறாக வேறு இடத்தில் சமையலறை அமைந்துவிட்டால் அதற்கேற்ப பாதக பலன்களை தந்துக்கொண்டிருக்கும். சமையலறையை வேறு இடத்திற்கு மாற்றவும் இயலாதபட்சத்தில் என்ன செய்வது?

அதற்கு எளிய மாற்றம் செய்து வாஸ்து பலனை பெற முடியும்.

அதாவது, வாஸ்து விதிக்கு எதிராக அமைந்த சமையலறையில், தென்கிழக்கு மூலையில் அடுப்பு (GAS STOVE) அமைக்க வேண்டும். அந்த சமையலறையின் வடகிழக்கு பகுதியில் பாத்திரம் கழுவும்தொட்டி (KITCHEN SINK) அமைக்கவும். இந்த சிறிய மாறுதலே முட்டுகட்டைகளை முறித்து, நல்லவிதமான முன்னேற்றத்தை பெற வழிவகுக்கும். ஆகவே, ஜாதகம் சாதகமாக அமைய வாஸ்துவும் முக்கியம் என்பதே உண்மை!


For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/



© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved