Astrologer, Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau.
அந்த காலத்தில் பிள்ளைகளுக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் காலகாலத்திலேயே திருமணம் தடையில்லாமல் நடைபெற்றது. அந்த காலத்தில் மேட்ரிமோனி மையங்கள் இல்லை. கல்யாண தரகர்களும் அதிகம் இல்லை. ஆனால் இன்றோ தடுக்கி விழுந்தால் மேட்ரிமோனி மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெருகிவிட்டது.
எத்தனை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்தாலும் பலருக்கு வரன் அமைவது என்பது குதிரை கொம்பாகதான் இருக்கிறது.
பிரபல மனோதத்துவ அறிஞர் சிக்மண்ட்ஃபிராய்டு.
இவர் புகழ் பெற்றவராக இருந்தாலும், ஏனோ அவருக்கு மணவாழ்க்கை அமைய தாமதமாகி கொண்டேபோனது. திருமணத்திற்கு எண்ணற்ற பெண்களை பார்த்தும் எந்த பெண்ணும் அவருக்கு அமையவில்லை.
இவருக்கு பெண் பிடித்திருந்தால், பெண்ணுக்கு இவரை பிடிக்காமல் போய்விடும். இப்படியே பல வருடங்களாக பெண் பார்த்து வந்தார்.
ஒருசமயம், தரகர் ஒருவருடன் பெண் பார்க்க சென்றார் சிக்மண்ட்ஃபிராய்டு. சிக்மண்ட்டுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லை. அதனால் தரகரை தனியாக அழைத்து சென்று, “இந்த பெண்ணை பார்ப்பதற்கே சகிக்கவில்லை. வயது ரொம்ப அதிகம் போல தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண் யாரை பார்க்கிறாள் என்று கூட தெரியாத அளவுக்கு கண் பார்வையில் கோளாறு. இவளை திருமணம் செய்து கொண்டு தெருவில் கூட என்னால் நடக்க முடியாது.” என்றார் சிக்மண்ட்.
அதற்கு அந்த தரகர், “இதை அந்த பெண்ணின் எதிரேயே சொல்லி இருக்கலாமே.” என்றார் தரகர்.
“இதை எப்படி அந்த பெண்ணின் எதிரே சொல்ல முடியும். அவள் வருதப்பட மாட்டாளா?” என்றார் சிக்மண்ட்.
“வருத்தப்பட மாட்டாள். ஏன் என்றால் அவளுக்கு காதும் கேட்காது.” என்றார் தரகர்.
பெண்பார்த்து பெண்பார்த்து தரகருக்கே அலுத்துவிட்டது.
பல பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையாமல் வருத்தப்படுகிறார்கள்.
எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று தெரியாமல், யார் யார் என்னென்ன பரிகாரம் சொன்னாலும் அதை சரியாக செய்து வருகிறார்கள். ஆனாலும் திருமணம் தாமதம் ஆகிறது.
குழந்தை பிறக்க பெண்கள் அரசமரத்தை சுற்றுவதைபோல, திருமண தடை விலக, ஊரில் உள்ள எல்லா மரத்தையும், கோவிலையும் சுற்றி விட்டேன் என்று வேடிக்கையாக சில்ர் சொல்வதை கேட்டதுண்டு.
எந்த அளவுக்கு அவர்கள் மனவேதனையோடு இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தையிலேயே தெரிகிறது.
“ஜோதிடரே என் பொண்ணுக்கு 30 வயதாகிவிட்டது, இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது அமையும்?” என்று கலங்கும் பெண்ணை பெற்றவர்கள் ஏராளம்.
அதுபோல, “ஐயா, ஜோதிடரே என் பையனுக்கு வயது 30-க்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் திருமணம் அமையவில்லை. எப்போதுதான் அமையும் என ஜாதகத்தை பாருங்கள்” என மனம் வருந்தும் பெற்றோர்கள் எண்ணிலடங்காது.
இவர்களுக்கு திருமணம் ஏன் தடைப்படுகிறது. என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால், அவர்கள் களத்திர ஸ்தானத்தில் அல்லது குடும்பஸ்தானத்தில் குறை இருக்கலாம் – அதனால் தடைப்படலாம்.
ஜாதகத்தில் தோஷம் இருக்கலாம், அதனாலும் தடைப்படலாம். சரி, ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் திருமண தடை இருந்தாலும், அவர்களுடைய பெற்றோரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11-ம் ஸ்தானத்தை பார்த்தால், மருமகன் – மருமகள், வீட்டில் காலடி எடுத்து வைப்பார்களா என்பதை கண்கூடாக கணித்து விடலாம்.
தாயாருடைய ஜாதகத்திலோ அல்லது தந்தையின் ஜாதகத்திலோ லக்கினத்திற்கு 11-ம் இடம் சுபிக்ஷமாக அதாவது லக்கினாதிபதியோ 2,4,5,7,9,10,11-க்குடையவனோ
அமர்ந்திருந்து, பாவ கிரகங்கள் பார்வை படாமல் இருந்தால் விரைவில் “பாத பூஜை” நடக்கும்.
அதாவது மருமகளோ, மருமகனோ இல்லத்தில் காலடி எடுத்து வைப்பார்கள்.
லக்கினத்திற்கு 11-ம் இடத்தில் பாபி எனப்படும் இராகு அல்லது கேது இருந்தாலும், அந்த வீட்டுக்குரிய கிரகம் நல்ல ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயம்
நடக்கும்.
அப்படி இல்லாமல், லக்கினத்திற்கு 11-ல் 12-க்குரியவன், 8-க்குரியவன், 6-க்குரியவன் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால், திருமண தடை நீண்டுக்கொண்டே போகும். அதனால், திருமண வரன் சீக்கிரம் அமையுமா என தெரிந்துக்கொள்ள பெற்றோரின் ஜாதகத்தில் 11-ம் இல்லத்தை வைத்தும் அறிந்துக்கொள்ளலாம்.
சரி. 11-க்குரியவன் 6,8,12-க்குரியவனாகவோ அல்லது 11-க்குரியவன், நீச்சஸ்தானத்தில் இருந்தால் அந்த வீட்டுக்குரியவன் கேந்திரம் – திரிகோணம் ஏறினால் மருமகளோ – மருமகனோ நல்லமுறையில் இல்லத்தில் காலடி எடுத்து வைப்பார்கள்.
அதனால் பிள்ளைகளின் ஜாதகத்தில் திருமண தடை இருந்தாலும், பெற்றோரின் ஜாதகப்படி கிரகங்கள் சாதகமாக இருந்தால் பிள்ளைகளுக்கு திருமண யோகம்
எளிதில் அமையும் எனலாம்!
For Astrology Consultation
Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone
Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation
Mail to: bhakthiplanet@gmail.com
Free Register For All Community REGISTER NOW http://www.manamakkalmalai.com/