Tuesday, May 19, 2020

தைரியமானாவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG

“நான் பார்த்ததில் அந்த மனிதரைபோல் பார்க்கவில்லை. அடேங்கப்பா… பயங்கர தைரியஸ்தன். காரியங்களை சாதிப்பான். எதிர்பவனை தலைவணங்க வைப்பான். அவனிடம் ஒன்றும் செய்ய முடியாது”

அப்படிபட்டவர்கள் யார்?. யாராக இருக்க முடியும்? என்றால், லக்கினத்திற்கு 3-ம் பாவம், தைரியம்-வீரியம், பராக்கிரம ஸ்தானம். இந்த ஸ்தானதிபதி பலம் பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்களிடம் அமைதியாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும்.

3-ம் பாவத்தில், 3-க்குரியவர் அமர்ந்து, 6-க்குரியவன் பார்வை பெற்றாலும், 3-க்குரியவன், 6-8-10-ல் இருந்தாலும், சென்றேன் – வென்றேன் என்றிருப்பவர்கள்.

3-ம் இடத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன் இருந்தால் அஞ்சாநெஞ்சர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள்.

இப்படி 3-ம் பாவம் வலுப்பெற்று இருப்பவர்கள், எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

பணம் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மிக, மிக முக்கியம். ஒருவரை பார்த்து, “அவருக்கென அவர் நினைத்ததை வாங்குவாரய்யா..” என்கிறோம். காரணம் என்ன? அவர் வசதி படைத்த பணக்காரர். வசதி உள்ளவரிடம் வாய் கொடுக்காதே என்கிறோம். காரணம்? அவர் பணக்காரர்.

இப்படி பணம் ஒருவரை உயர்ந்த ஸ்தானத்திற்கு மதிப்பளித்து கொண்டு செல்கிறது. எங்கு சுற்றினாலும் தேரு, தேரடிக்குதான் வந்தாக வேண்டும் என்பதைபோல, எப்படி பார்த்தாலும் கடைசியில்வரையில் நமக்கு தேவையானது பணம், பணம், பணம். இவனின்றி அவசர காரியம் எதையும் சாதிக்க முடியாது.

சரி,

பணம் நமக்கு வருமா? வளமாக இருப்போமா? என்று ஜாதக ரீதியாக தெரிந்துக்கொள்ள 2-ம் இடம், 5-ம் இடம், 9-ம் இடம் மிக,மிக முக்கியமாக இருக்கிறது.

லக்கினத்திற்கு 2-ம் இடத்து அதிபதி 5, 9-ல் பகை பெற்று இருக்கக் கூடாது. 5-ம் இடத்தின் அதிபதி 2, 9-ல் பகை-நீச்சம் பெற்றுக் இருக்கக் கூடாது. 9-ம் இடத்து அதிபதி 2, 5-ல் பகை-நீச்சம் பெற்று இருக்கக் கூடாது. 2, 5, 9-க்குரியவர்கள் உடன் 6, 8, 12-க்குரியவர் சேரக் கூடாது.

6, 8, 12-ல் 2-ம் இடத்து அதிபதி, 5-ம் இடத்து அதிபதி, 9-ம் இடத்து அதிபதி இருக்கக் கூடாது. ஆக, பெருத்த பணக்காரர்களாக வேண்டும் என்றால் ஜாதகமும் சாதகமாக இருக்க வேண்டும் அதில், 2, 5, 9-ம் பாவாதிபதிகள் பராக்கிரமாக இருக்க வேண்டும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

வாதம் செய்யும் வக்கீல் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

இன்று சிலருக்கு வக்கீல் ஆக வேண்டும் என்று தீரா ஆசை இருக்கிறது. என்னிடம், ஜாதகப்படி யோகம் இருக்கிறதா? என்று சிலர் கேட்பது உண்டு. வக்கீல் ஆக வேண்டும் என்றால் நினைத்தது நடக்கும் மேஜீக் ஷோ அல்ல. அதற்கு கொடுப்பினை வேண்டும். அதாவது ஜாதகத்தில் வாதத் திறமை என்னும் பேச்சு திறமை தரும் வாக்குஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும்.

பேச்சில் மட்டும் போதுமா? மேஜையை தட்டி, கைகளை ஆட்டி தைரியமாக பேச தைரிய, வீரியஸ்தானம் எனும் 3-ம் இடம் அருமையாக இருக்க வேண்டும். ஆக்ரோஷமாக பேசிவிட்டால் போதுமா? சம்பாதிக்க வேண்டுமே, அதற்கு லாபம் தரும் 11-ம் இடம் சுபிட்சமாக இருக்க வேண்டும். இங்கு 2-ம் இடம், 3-ம் இடம், 11-ம் இடம் பலமாக இருந்தால் நீங்கள் வக்கீல் ஆகலாம்.

வாக்குஸ்தானதில் 6,8,12-க்குரியவர் இருக்கக் கூடாது. வாக்குஸ்தான அதிபதி 6,8,12-ல் இருக்கக் கூடாது. வாக்கு வாதம் செய்யும்பொழுதே குழம்பி விடுவார்கள். தைரியஸ்தானமான 3-ம் இடத்தில் செவ்வாயோ, சூரியனோ 3-ம் இடத்திற்குரியவரோ இருந்தால், எதிராளியை உருட்டி, பிரட்டி எடுத்துவிடுவார்கள்.

சரி ஜெயித்தும் ஆகிவிட்டது. வருமானம்?

நாக்கு வரண்டு போகும் அளவு பேசியதற்கு வருமானம் வர வேண்டாமா?. அதற்கு லாபஸ்தானம் என்னும் 11-ம் இடம் உச்சம் பெற்றோ அல்லது 11-ல், 2-5-9-க்குரியவர் இருந்துவிட்டால் நல்ல வருமானம் வாசல் தேடி வந்து நிற்கும். இவர்களே வாதாடும் வக்கீல்கள்.

10-ம் இடத்தில் கேது அமர்ந்து சுபர் பார்வை பெறவில்லை என்றால், நீங்கள் வாதாடும் வக்கீலாக வர முடியாது. வாய்தா வக்கீலாக வருவீர்கள். வருமானம் ஓரளவுக்கு வந்துவிடும். ஆகவே உங்கள் ஜாதகத்தில் 2,3,11-ம் இடம் அருமையாக பாதிப்பு இல்லாமல் இருந்தால் நீங்கள் வாதம் செய்து புகழ் பெறும் வெற்றிகரமான வக்கீலாக திகழ்வீர்கள்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

கடனில் தத்தளிப்பவர் கரை சேருவாரா? 6-ம் இடம்!

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

“ஓகோ என்று இருந்தேன்.. பெரிய தொழில்சாலை.. பேரை சொன்னால் போதும் விலாசம் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். தொண்டு நிறுவனங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அள்ளி கொடுத்த நன்கொடை எவ்வளவு என்று எனக்கே தெரியாது. அப்படி வாழ்ந்தவன். இன்று தொழிலில் பெரும் சறுக்கல். மலை மீதிருந்து கடகடவென உருண்டு விழுந்த பாறை போல் விழுந்துவிட்டேன். இன்று, கடன் என்னும் கடலில் நீந்துகிறேன். கரை ஏறுவேனா?”

இப்படி ஒரு அன்பர் என்னிடம் கேட்டார். நான் சொன்ன ஒரே பதில். உன் ஜாதகத்தில் 6-ம் இடம் பார். கவலை வேண்டாம் என்றேன்.

கடன், ரோகம் இதை கொடுப்பது 6-ம் இடம்தான். “இந்த 6-ம் இடத்தில், அதாவது லக்கினத்தில் இருந்து 6-ம் இடத்தில் 8,12-க்குரியவன் இருந்தால், கடன் என்னும் கடலில் நீந்தி கரையேறுவாய்” என்றேன்.

லக்கினத்திற்கு 5,9-க்குரியவர் திசை நடந்தாலும் விட்டதை பிடிக்கலாம். 6-க்குரியவன் நீச்சம் பெற்று, அவன் திசை நடந்தாலும் கடன்கள் கரைந்து போகும். பட்டது துளிரும்.