Tuesday, March 18, 2014

சித்திரை ஜய வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்!



 Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

இராசிகள் பன்னிரெண்டு. அவற்றில் முதல் இராசி மேஷம். இந்த மேஷ இராசியில் சூரியன் வரும் மாதம் சித்திரை மாதம் என அழைக்கப்படுகிறது. மேஷ இராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறது.

சூரிய பகவான் மேஷத்தில் உச்சமாக (வலுவாக) அமைந்திருக்கும் சித்திரை மாதத்தில், கண்கண்ட தெய்வமான சூரியனை, தமிழர்கள் போற்றி கொண்டாடும் விதமாக தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த தமிழ் புத்தாண்டின் பெயர் ஜய வருஷம். “ஜெயம்” என்றால் வெற்றி பெறுவது. எல்லாத்துறைகளிலும் ஜெயம் அடைவது. வருடத்தின் பெயரே “ஜய” என்று வருவதால்… மேலும் படிக்க

குரு பெயர்ச்சி இராசி பலன்கள்! 2014 – 2015

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால்… மேலும் படிக்க 








Sunday, March 9, 2014

பலன் தரும் அபிஷேகங்கள்



Written by Niranjhana

இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

நல்லெண்ணெய் அபிஷேகம்:  மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும். 

தண்ணீர் அபிஷேகம்…மேலும் படிக்க 


Thursday, March 6, 2014

கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!



Written by Niranjhana

அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.

மழை நீரானது சுவாதி நட்சத்திர வேளையில் கடலில் இருக்கும் சிப்பிக்குள் விழுந்து முத்தாக கிடைக்கிறது என்கிறது நட்சத்திர சாஸ்திரம்.