Written by Niranjana
ஜீவராசிகள்
அனைத்துக்கும் ஒரு குணம், உடல்
அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம்
இருக்கும், பெண் யானைக்கு தந்தம்
இருக்காது என்பது பொதுவான கருத்து.
ஆனால்
ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண்
யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது.
ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு
ஏற்ப இறைவனின் தந்துள்ளான்.
மனிதன்
என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே
மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
மனிதன்,
நற்கணங்களுடன் இருக்க வேண்டும். ஆனால்,
அந்த நற்குணம் அனைவருக்கும் இருக்கிறதா என்றால் அப்படி இருப்பதில்லை.
அப்படி
நற்குணமும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவர்களை
நாம் ஞானி எனவும், மகான்
எனவும், ரிஷி-தெய்வ பிறவி
எனவும் போற்றுகிறோம். அப்படிப்பட்ட ஒரு தெய்வ பிறவிதான்
நமது ரமண மகரிஷி.
ஒருநாள்
ரமண மகரிஷியை கணபதி முனிவர் என்பவர்
சந்தித்தார். “நான் கற்க வேண்டியதை
யாவும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் கற்றேன்.
பல மந்திரங்களை ஜபித்தேன். ஆனால், “தபஸ்” என்பதன்
தாத்பரியம் மட்டும் விளங்கவில்லை.” என்றார்
கணபதி முனிவர்.
அதற்கு
மகான் ரமண மகரிஷி, “”நான்”
என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக் கவனித்தால் அங்கே
மனம் பலவீனமாகும். அதுவே ஒரு மந்திரத்தை
ஜெபம் பண்ணினால், அந்த மந்திரவொளி எங்கிருந்து
புறப்படுகிறதோ அதைக் கவனித்தால், அங்கே
மனம் பலமாகும். அதுதான் தபஸ்.” என்றார்
மகரிஷி.
இப்படி
எளிமையாக மனதெளிவை பற்றி விளக்கினார் மகான்.
மனம் பலமாக இருந்தாலே அனைத்து
காரியங்களும் ஜெயம் அகும். தவம்
என்பது இறைவனை காணுவது மட்டும்
அல்ல. நம்முடைய நல்ல செயல் அனைத்தும்
வெற்றியாக அமைய மனதை ஒருமுகப்படுத்த
வேண்டும். மனம் தெளிவாக இருக்கவேண்டும்
என்பதை ரத்தின சுருக்கமாக விளக்கினார்
மகான்.
அன்றும்
இன்றும் என்றென்றும் நமது உள்ளத்திற்கு உறுதி
தந்து திருவண்ணாமலையை போல நிலைத்து இருப்பார்
மகான் ஸ்ரீரமணர்.!
Tamil New Year Rasi Palangal 2017 –2018 All Rasi palangal Click Here
2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
Face Reading Part 1 - Click
Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=u0ee9RlVIPg
For Astrology Consultation Mail to:
bhakthiplanet@gmail.com
© 2017 bhakthiplanet.com All
Rights Reserved