Saturday, April 8, 2017

செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

செய்வினை என்றால் என்ன?. முன்ஜென்ம வினையால் எதிரிகளை பெற்று, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் செய்வினை. ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை. ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.

இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?. இதுதான் கேள்வி.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது சந்திரன் நீச்சம் அடைந்திருந்தால், 6-8-12-ம் இடங்களில் மறைந்திருந்தால் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்திரன் நீச்சம் அடைந்து, அந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றால் பயம் இல்லை. 6-8-12-இல் சந்திரன் சுபர் பார்வை, சுபர் சேர்க்கை பெற்றதாலும் பயம் இல்லைபாதிப்பு இல்லை.

பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5-ம் இடம் பலம் குறைந்தாலும் கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு உண்டாகும். இன்னும் ஆழமாக இந்த செய்வினை பற்றி ஆராய்ந்தால், பூர்வீகத்தில் செய்தவினைதான் தற்பொழுது செய்வினையாக பாதிக்கிறது.

ஒருவன் தெரியாமல் அல்லது தெரிந்து செய்த வினையே அவனை பாதிக்கிறது. அப்பன் வாங்கிய கடன் பிள்ளையை பாதிப்பதுபோல் பூர்வீகத்தில் செய்த தவறு இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தாலும் அது சற்று தண்டித்துவிட்டு செல்லும்.

நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே, யாருக்கும் துரோகம் செய்யவில்லையே எனக்கு ஏன் இப்படி ஏற்படுகிறது?” என்று கேட்டால், நீ முன்னேறக் கூடாது என்று ஒருவன் செய்துவிட்டால், அம்பாள் அருளால் அது நிவர்த்தி செய்யப்பட்டால், உன்னை பிடித்த வினை, ஏவியவனை பிடித்து வாட்டும் இதுதான் சத்தியம்.

சுவற்றில் பந்துபட்டு, எறிந்தவன் கைக்கே திரும்பும். அதுபோலதான் செய்வினை.

பாதிப்பு வந்தாலும் கவலையில்லை. கோயில்களுக்கு சென்று பிராத்தனை செய்வதாலும், நேர்த்தி கடன்களாலும், சில பரிகாரங்களாலும் நிச்சயம் பாதிப்பை தீர்க்க முடியும். ஆகவே, “ஐயோ நமக்கு செய்வினை செய்துவிட்டார்களே என்று பயமோ, கவலையோ வேண்டாம். எதற்கும் ஒரு தீர்வு உண்டு. ஆகவே ஸ்ரீதுர்காதேவி அருளால் கூறுகிறேன். மண் நன்றாக இருந்தால் மரம் வளரும். எண்ணங்கள் செயல்கள் நன்றாக இருந்தால் செழிப்பான வாழ்க்கை உண்டு. நம் எண்ணமே ஏற்றம் தரும். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்!.

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய -மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved