Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau.
ஜாதகத்தில்
ஒரே ராசி கட்டத்தில் எல்லா
கிரகங்களும் சேர்ந்து ஒன்றாக இருந்தால் அதை
“கிரக யுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோல்
நவரத்தின கற்களையும் ஒன்றாக சேர்த்து அணிந்தால்
நமது முயற்சியில் தடை, எதிர்பாராத பகை
நிம்மதி இல்லாமல் இருப்பது போன்ற பாதிப்புகள் இருந்துக்
கொண்டிருக்கும். காரணம் சூரியனுக்கு சனி
பகை. சூரியனுக்கு உகந்தது மாணிக்கம். சனிக்கு
உகந்தது நீலம். இவை ஒன்றாக
நவரத்தின மோதிரத்தில் சேர்ந்து அமைவதால் ஒன்றுக்கொன்று பகை ஏற்பட்டு அதை
அணிபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தர முடியாது. ஒன்பது
ரத்தினத்தை ஒன்றாக சேர்த்து நவரத்தின
மோதிரமாக அணியாமல் ஜாதகத்தை உங்கள் ஜோதிடரிடம் காண்பித்து
எந்த ரத்தினம் அணிந்தால் நல்லது என்று தெரிந்து
செய்து அந்த ரத்தினத்தை மட்டும்
அணிந்து சுகமான வாழ்க்கையை அமைத்து
கொள்ளுங்கள்.
ரத்தினத்தை
அணிந்தால் எப்படி நன்மை ஏற்படும்?
என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. நம் உடலில் ஏழு
சக்கரங்கள் உள்ளது. அந்த ஏழு
சக்கரங்களுக்கும் ஒவ்வோரு நிறமும் அந்த
நிறங்களுக்கு உகந்த சக்திகளும் இருக்கிறது.
இதை பற்றி ஒவ்வோரு ரத்தினத்தை
குறிப்பிடும் போது விளக்கமாக சொல்கிறேன்.
உடலில்
இருக்கும் சக்கரத்துக்கும் அதன் சக்திகளையும் செயல்படுத்தவே
நவரத்தினங்களை அணிய வேண்டும். உடலில்
ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருந்தால்
அந்த இடத்தில் சிகப்பு நிறத்தை காட்டி
சீரான ரத்த ஒட்டத்தை உண்டாக்குவார்கள்
மருத்துவர்கள். அதுபோல் நாம் அணியும்
ரத்தினத்தின் மேல் சூரிய ஒளிபட்டு
அந்த ரத்தினத்தின் நிறம் உடலுக்குள் ஊடுருவி
இயங்க ஆரம்பிக்கிறது.
பொதுவாக
உயர்ந்த ஜாதி இரத்தினத்தை அணிந்தால்தான்
நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது
சிலருக்கு. ஆனால் குறைந்த விலை
ரத்தினம் கூட ஏற்றத்தை கொடுக்கிறது
பலருக்கு.
உயர்ந்த
ஜாதி ரத்தினங்கள் வாங்கலாமா? அல்லது விலை குறைந்த
இரத்தினங்கள் வாங்கலாமா? என்று பார்ப்பதை விட
வாங்கப்படும் இந்த இரத்தினம் தோஷம்
இல்லாமலும், விரிசல் இல்லாமலும் இருக்கிறதா
என்று பார்த்து வாங்க வேண்டும் என்கிறது
இரத்தின சாஸ்திரம்.
2017 Numerology Predictions Click Here
SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
Know Your Complete Horoscope prediction
For Astrology
Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology
Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai,
Tamilnadu, India
For Astrology
Consultation Mail to: bhakthiplanet@gmail.com
ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2017 bhakthiplanet.com All
Rights Reserved