Friday, July 8, 2016

கண்திருஷ்டியால் கட்டை விரல் கருப்பானது




Written By Niranjana

பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும்பொருளையும் கொட்டுவார்கள்என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது.  

இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved